மூன்று முறை அதிமுக தலைமையை சந்தித்துவிட்டார் எஸ்.ஏ.சி. இன்னும் முப்பதுபடங்களில் நடித்துவிட்டுதான் விஜய் அரசியலுக்கு வருவார். ஆனால் நான் அதற்கு முன்பே வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார் அவர். இந்த விளக்கம், இதற்காகதான் அவர் ஜெ.வை சந்தித்தாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது மக்களிடம்.
என் பிள்ளைகளுக்கு (ரசிகர்களைதான் அப்படி சொல்கிறார்) ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி கொடுக்கிற பட்சத்தில் தன் தொண்டர்களுக்காக விஜய் குரல் கொடுப்பார் என்பதும் எஸ்.ஏ.சியின் மிக முக்கியமான ஸ்டேட்மென்ட்டாக இருக்கிறது. அப்படியென்றால் ரஜினியை போல தேர்தல் நேரத்தில் விஜய் 'வாய்ஸ்' கொடுப்பாரோ?
பிரபல வார இதழ் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கு பின் வருமாறு பதில் சொல்லியிருக்கிறார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. "விஜய் ரசிகர்களுக்கு, என் பிள்ளைகளுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது அளித்தால், அவர்களுக்கு விஜய்யின் அதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுக்காக அவர்களது வெற்றிக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். தனது தொண்டர்கள் ஜெயிக்க வேண்டும் என்று தலைவன் ஆசைப்படுவதில் தவறில்லையே!"
Tags : Vijay , Vijay In Politics


Aucun commentaire:
Enregistrer un commentaire