நகையில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேசிய விஜய் சில பாடல்களையும் பாடினார். கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கூச்சலும் அலறலுமாகவே இருந்தது. விஜய்யே மேடைக்கு வந்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டும் அவர் ரசிகர்கள் கேட்பதாக இல்லை.
நான் மீனவ நண்பன் படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன விஜய் கடல் மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்... என்று எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினார்.
அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி முடித்த விஜய் என் படத்தைப் பற்றியும் சில விஷயங்கள் பேச நினைக்கிறேன். காவலன் பல தடைகளை தாண்டி வெளிவந்தது. அதற்கு நீங்கள் ஆதரவு கொடுத்து வெற்றிப் படமாக கொண்டாடினீர்கள். இப்போது வேலாயுதம் நடந்து கொண்டு இருக்கிறது. இது உங்களுக்கு பிடித்த வகை மாஸ் படமாகவே இருக்கும்.
நான் 51 படங்கள் நடித்து விட்டேன். இத்தனைப் படங்களில் எனக்கு கிடைக்காத பாடல் எனக்கு வேலாயுதம் படத்தில் அமைந்தது. அது உங்களைப் பற்றிய பாடல். நான் எப்போதும் உங்களுக்கா இருக்கிறேன் என்று சொல்லி, கொஞ்சம் அமைதி காத்தீர்கள் என்றால் அந்தப் பாடலை பாடுகிறேன் என்றார். ஆனால் விஜய் எவ்வளவோ கையசைதாலும் ரசிகர் அமைதியாவது போல் தெரியவில்லை.
வேறு வழியில்லை என் நினைத்த விஜய் அந்த பாடலை உரக்கக் கத்திப் பாடினார். அவர் கத்த... பதிலுக்கு அவர் ரசிகர்கள் கத்த... ஒரேக் கதறல் தான்! விஜய் ரசிகர்களை உருக வைத்த வேலாயுதம் படத்தின் அந்தப் பாடல் இதோ...
ரத்தத்தின் ரத்தமே...
எனது உடன்பிறப்பே...
சொந்தத்தின் சொந்தமே...
நான் இயங்கும் உயிர் துடிப்பே!
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே...
என் வாழ்க்கை உனக்கல்லவா!
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்...
என் வாசம் உனக்கலாவா...
Tags : Vijay , Velayutham
Aucun commentaire:
Enregistrer un commentaire