samedi 12 février 2011

ஜெனிலியாவின் 'டப்பிங்' சஸ்பென்ஸ்


தமிழில் விஜய், ஹன்சிகா இருவருடனும் இணைந்து 'வேலாயுதம்'படத்தில் நடித்துவருகிறார் ஜெனிலியா.
அவர்  தமிழில் 'டப்பிங்' பேசியதால், உற்சாகமாக' ஹைய்யா..நான் டமில் பேசிட்டேன்..'என்று குதித்து அமர்களம் பண்ணிட்டாராம்.
கோடம்பாக்க படங்களில் நடிக்கும் போதே, 'தபாருங்க..நானும் டமிலில் பேசப்போறேன்' என்று  முன்பு சிணுங்கிய  ஜெனி, இப்படி பண்ணுவாரென யாரும் எதிர்பார்க்கவில்லையாம்.
'நான் முதன் முதலாக டமிலில் பேசி நடித்துள்ளேன்.அது படத்தில் வராது. ஒரு விளம்பர படத்திற்காக தமிழ் பேசியிருக்கேன்.எந்த கமெர்சியல் விளம்பரம் என்று சொல்ல மாட்டேனே...'என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
ஜெனிலியாவின் தமிழை கேட்கிறவர்கள் கிண்டல், கேலி பண்ணிடுவாங்களோ என்று லேசாக நடுங்கியவர், கோலிவுட்டின் பாராட்டை மட்டும்  எதிர்பார்க்கிறாராம்.
அவருடைய நடிப்பை விரும்பி ரசிக்கிற ரசிகர்கள், ஜெனிலியாவின் செம்மொழியை சகித்து ஏற்று கொள்வார்கள் என நம்பப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...