நண்பன் படத்தின் இசையமைப்புக்காக லண்டன் செல்கிறார்கள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் படத்தின் இயக்குநர் ஷங்கரும்.
நண்பன் படம் அமீர்கானின் 3 இடியட்ஸ் தழுவல் என்றாலும், இந்தப் படத்துக்கு ஒரிஜினல் ஸ்கோர் வேண்டும் என்பதில் ஷங்கர் தெளிவாக உள்ளார்.
பொதுவாக ஷங்கர் – ரஹ்மான் கூட்டணியின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும். ரஹ்மான் இல்லாமல் ஹாரிஸுடன் ஷங்கர் பணியாற்றிய அந்நியன் பாடல்கள் ஹிட் என்றாலும், ஷங்கரின் மற்ற படங்கள் அளவுக்கு பேசப்படவில்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கும் என்று கூறியுள்ளார் ஹாரிஸ்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள ட்விட்டர் செய்தியில், “இந்த முறை நண்பன் படத்துக்காக ஷங்கருடன் லண்டன் போகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக இந்தப் பட பாடல்கள் அமையும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
நண்பன் படத்தில் விஜய், ஜீவா, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் என 5 ஹீரோக்கள் நடிக்கிறார்கள்.
ஜெமினி நிறுவனம் தயாரிக்கிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire