dimanche 13 février 2011

நீரு பூத்த நெருப்பாக ரஜினி, விஜய், அஜித் !!



அண்மையில் கலைமாமணி விருதுகள் மாநில அரசால் அறிவிக்கப்பட்டன.  அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகர், நடிகையர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ஏதாவதொரு பெயரில் நடிகர், நடிகையர் பங்கேற்கும் விழாக்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் தவ
றாமல் ஒளிபரப்பாகின்றன. அதுவும் பல பாகங்களில் சின்னத்திரையில் மின்னுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமை சன் டிவி அல்லது கலைஞர் டி.வி.க்களுக்கு கிடைக்கின்றன. அவர்களுக்குக் கொள்ளை லாபம் இதில் கிடைக்கிறது. கலைமாமணி விருது வழங்கும் விழாவும் இந்தத் தொலைக்காட்சிகளில் ஒன்றிற்கே கிடைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த நிகழ்ச்சிக்கு இப்போதைய நடிகைகளையும் வரவைக்க வேண்டுமே... விருது கொடுத்தால் அவசியம் வருவார்கள். இதனால்தான் மூன்றே மூன்று தமிழ்ப்படங்களில் நடித்துள்ள  அனுஷ்கா கலைமாமணி ஆகிவிட்டார்.
அஜித்துக்கு அல்வா:
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும்படி எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அனைவரின் முன்பாக மேடையிலேயே பேசி அதிர வைத்த ‘தல’ அஜித், இதுவரை கலைமாமணி விருதுப்பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ள விஜய்க்கு கடந்த ஆண்டுதான் தரப்பட்டது. அனுஷ்காவிற்கு கலைமாமணி விருது என்பது ஒளிபரப்பு, விளம்பரம் ஆகியவற்றை மனதில் கொண்டே வழங்கப்பட்டுள்ளது என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முதல்வரைக் குளிரவைக்கும் வகையில் திரையுலகத்தினர் மேடையில் புகழ்ந்து தள்ளுகிறார்கள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும் உண்மையில் குமுறல்கள்தான் அதிகமாக உள்ளன. முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கதவை தொலைக்காட்சி நிறுவனத்தினர் அண்மையில் தட்டியிருக்கிறார்கள்.  என்ன என்று கேட்டதற்கு, வாழ்த்துச் செய்தி வாங்க வந்தோம் என்று வழிந்திருக்கிறார்கள். கண் சிவந்த ரஜினி, இடத்தைக் காலி செய்யுமாறு அவர்களிடம் கூறினார். பின்னர், நிறுவனத்தினர் பேசி வாழ்த்துச் செய்தியை வாங்கினார்கள்.

தனது படத்திற்கு முட்டுக்கட்டை போட்டதால் ஆளுங்கட்சியினரைக் கிலி பிடிக்கச் செய்து வருகிறார் விஜய். விழாக்களுக்கு வந்து மேடையில் ஆட முடியாது என்று சொல்வதால் ஏற்கெனவே வேண்டாதவராகிவிட்டார் அஜித். இந்த மூவர்தான் திரையுலகில் இன்று கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பவர்கள். இதோடு, பணத்தைப் போட்டு படத்தை எடுத்துவிட்டு வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் பலர் என்று அரசுக்கு எதிரான மனப்பான்மையுடன் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...