mardi 1 février 2011

எப்படிப் பிடித்தார் எஸ்.ஜே.சூர்யா?


தமிழ் ரசிகர்கள் கைவிட்டதாலோ என்னவோ கோபத்தோடு டோலிவுட் போய் கோமரம் புலி படத்தை இயக்கி விட்டு, நிஜப் புலி அடித்தவர் மாதிரி திரும்பி வந்தார் இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூரியா. இனி சூரியா அவ்வளவுதான் என்று உமியை மென்ற வாய்களை, இரண்டு அதிரடிகள் மூலம் அடைத்திருக்கிறார். வாலி மூலம் அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இவர், வாலி மூலம் அஜித்துக்கும், குஷி படத்தின் மூலம் மூலம் விஜய்க்கும் பிரேக் கொடுத்தவர்.
 
சூர்யாவுக்கு கிரகம் ஆரம்பித்தது நியூ படத்தில். அஜித் இதெல்லாம் ரொம்ப அசிங்கமான கதை என்று மறுத்த நியூ படத்தில் இவரே ஹீரோவாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினாலும், நியூ வசூலில் சக்கை போடு போட்டது வசூலில். நியூவைத் தொடர்ந்து பெரும் கனவுகளோடு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி என வரிசையாக அதிரடித் தோல்விகளைக் கொடுத்தார்.

கோமாரம் புலி வாலைப் பிடித்து காயம் பட்ட சூரியா இப்போதைக்கு டோலிவுட்டில் கால் வைக்க மட்டார் என்பது மட்டும் நிச்சயம். இருக்கவே இருக்கிறது கோலிவுட் என களத்தில் குதித்திருக்கும் இவர் இம்முறை இயக்கம், நடிப்பு இவற்றோடு, இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
 
படத்துக்கு ‘இசை’ என்று தலைப்பு வைத்திருக்கும் சூரியா இம்முறை டீசெண்டான கதையைக் கையில் எடுத்திருக்கிறார் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! மீண்டும் சூரியாவுக்கு நல்வரவு சொல்லும் அதே நேரம் இவருக்கு எப்படி 3 இடியஸ் வாய்ப்பு கிடைத்தது என்று ஆச்சரியமாகக் கேட்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சூரியாவுக்கு இயக்குனர் ஷங்கரிடம் சிபாரிசு செய்ததே விஜய்தான் என்கிறார்கள் அழுத்தம் திருத்தமாக! அடுத்த ஆண்டு எஸ்.ஜே. சூரியா இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பதுதான் விஜய் ரெக்கமண்டேஷனுக்குக் காரணம் என்கிறார்கள் விஜய் வட்டாரத்தில் இருந்து…
அந்த படத்தின் பெயர் புலி என்று கூறுகிறார்கள் ...

ஓ கதை அப்படிப் போகுதா?  
 
Like it & puli movie Page 

 http://www.facebook.com/pages/Puli-puli/133883780004820

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...