தமிழில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் காலம் எல்லாம் கடந்து விட்டது. ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிக்கும் எண்ணம் எல்லா ஹீரோக்களுக்கும் வர வேண்டும். தற்போது வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் சிலர் ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிப்பது தமிழ் சினிமாவிற்கு நல்ல அரோக்கியத்தை தந்திருக்கிறது. அப்படி ஈகோ இல்லாமல், எவருடனும் சேர்ந்து நடிப்பேன் என்று சக நடிகர்களிடம் மச்சான் உறவை ஸ்திரப்படுத்திக் கொண்டவர் ஜீவா. சைலண்டாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஜீவா, இன்றைய தேதியில் அதிக படங்கள் கையில் வைத்திருக்கும் நடிகர். தற்போது இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆவலுடன் இருப்பதாக ஜீவா கூறியுள்ளார். மேலும் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதன் மூலம் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறேன் என்று ஜீவா கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire