'சட்டப்படி குற்றம்' பட வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தினம் தினம்தவணை முறையில் நிருபர்களை சந்தித்து படம் பற்றி பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரது இன்னொரு முக்கியமான வேலை போயஸ் கார்டன் கதவை தட்டுவதாகவும் இருக்கிறது. அதற்கு வெவ்வேறு காரணங்களை வெவ்வேறு தரப்பில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிஜம் வேறு என்கிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான சோர்ஸ் ஒன்று.
சட்டப்படி குற்றம் படத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை மிக தைரியமாக கூறியிருக்கிறாராம் எஸ்.ஏ.சி. அது மட்டுமல்ல, காவலனுக்கு பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து தனது மனக்குமுறல்களை கொட்டிவிட்டு வந்தார். இவ்வளவு வெளிப்படையாக இறங்கிவிட்ட பின், பின்வாங்கினால் பொருத்தமாக இருக்காது அல்லவா? அதனால் இம்மாதம் நடைபெற இருக்கும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்னாள் முதல்வர் ஜெ.வை அழைத்திருக்கிறாராம். இந்த வேண்டுகோளை பரிசீலனையில் வைத்திருக்கிறாராம் ஜெ.வும்.
ஒருவேளை அவர் வர ஒப்புக் கொண்டால் முதல் பாடல் பிரதியை ஜெ.வெளியிட விஜய்யும், டைரக்டர் ஷங்கரும் பெற்றுக் கொள்வார்கள் என்கிறது அந்த தகவல் வட்டாரம்! ஒரே மேடையில் ஜெ.வும் விஜய்யும் இருக்கிற காட்சி. வரும் தேர்தலுக்கு பயன்பட்டால் இருதரப்புக்கும் சந்தோஷம்தானே!
Aucun commentaire:
Enregistrer un commentaire