மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் பற்றி நாளும் ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது. இப்போது இவரது படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் புக் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராவணன் படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக இயக்கப்போகும் படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை மையமாக வைத்து சரித்திர படமாக இப்படத்தை இயக்க இருக்கிறார் மணி. இப்படத்தில் நடிக்க ஏற்கனவே விஜய், ஆர்யா, மகேஷ்பாபு, அனுஷ்கா உள்ளிட்டவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டனர். படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக சிலதினங்களுக்கு முன்னர் பி.சி.ஸ்ரீராமை சந்தித்துள்ளார் மணிரத்னம். இவர் ஏற்கனவே மணிரத்னத்துடன் மெளன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, திருடா திருடா, அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம்.
Tags : Vijay, Ponniyin Selvan


Aucun commentaire:
Enregistrer un commentaire