இதுவரை மகேஷ்பாபுவுடன் ஜோடி போட்டு வந்த அனுஷ்கா, இப்போது டைரக்டர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் மகேஷ்பாபுவின் தங்கையாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளவர் மகேஷ்பாபு. இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவருடன் நடிகர் விஜய், ஆர்யா, நடிகை அனுஷ்கா உள்ளிட்டவர்களும் நடிக்கவுள்ளனர். கல்கியின் நாவலை மையமாக வைத்து சரித்திர படமாக எடுக்கப்படவுள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக விஜய்யும், ஆதித்ய கரிகாலனாக மகேஷ்பாபுவும், அருள்மொழி வர்மனாக (இப்போது ராஜ ராஜ சோழன்) ஆர்யாவும் நடிக்கின்றனர். படத்தில் விஜய்யின் காதலியாக நடிக்கும் அனுஷ்கா இப்போது மகேஷ்பாபுவின் தங்கையாகவும் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். தற்போது திரைக்கதைக்கான வேலையில் மும்மரமாக இறங்கியுள்ள மணிரத்னம், விரைவில் இப்படத்திற்கான சூட்டிங்கை தொடங்க இருக்கிறார்.
Tags : Vijay, Ponniyin Selvan


Aucun commentaire:
Enregistrer un commentaire