mercredi 20 avril 2011

வேலாயுதம் பாடல் வெளியீடு ஜெயலலிதா வருவாரா?


திரி சாய்ந்திருந்தாலும், சுடர் நிமிர்ந்தேதான் நிற்கும் என்பதற்கு இதுவும் ஒருVijay - Jayalalithaஉதாரணம். வேலாயுதம் படப்பிடிப்பில் விஜய் கொடுக்கும் சின்ன சின்ன குடைச்சல்கள் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஊர் உலகம் மயங்கும்படி நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் அவர்.
தனது சட்டப்படி குற்றம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.வை அழைத்து வந்துவிட வேண்டும் என்று துடியாக துடித்தார் எஸ்.ஏ.சி. ஆனால் அது நடைபெறவில்லை. என் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் உண்டு. நான் இல்லாமலே விழாவை ஜாம் ஜாம்னு நடத்துங்க என்று கூறிவிட்டார் ஜெ.
ஆனால் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ஜெ. இந்த விழாவை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் ரவிச்சந்திரன். எது நடந்தாலும் அது தேர்தல் முடிவை ஒட்டியே அமையும் என்பதுதான் நிதர்சனம்!


In English 


Latest kollywood rumors says that Vijay & Aascar Ravichandran has met in some new controversial issues recently which made Ravichandran to be sadden. But sources close to Ravichandran says, he is not aware of these issues, and he will organize the audio launch of Velayutham in an enormous way than ever. We all know that J.Jayalalitha was invited to SA.Chandrasekhar's 'Sattapadi Kutam' audio launch but unfortunately she didn't attend the launch because of an unavoidable busy schedule. Now a new rumor airs that J.Jayalalitha was once again invited for Vijay's Velayutham audio launch and luckily she gave her word for her presence. Kollywood circles say that the launch may be held in the Nehru stadium in Chennai.


Translate By Vasan



Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...