விஜய் நடித்த காவலன் படத்திற்கு வெளிநாட்டு உரிமைக்காக ஃபைனான்ஸ் கொடுத்த்வர் தடை வாங்கியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். வேலாயுதம் படத்தின் இயக்குனர் அதிரடித் தடை போட்டிருக்கிறார் விஜய்க்கு. இந்தத் தடை அவர் படத்தில் நடிப்பதற்கு அல்ல. ஒரு படத்தைப் பார்க்கக் கூடாது என்பதற்கு.
விஜய் தற்போது நடித்துவரும் வேலாயுதம் படம் தெலுங்கில் நாகார்ஜுன் ஹீரோவாகவும், காலம் சென்ற சௌந்தர்யா ஹீரோயினாகவும் நடித்த ஆசாத் படத்தின் ரீமேக். இயக்குனர் ராஜா கதை சொன்னதும், ஆசாத் படத்தை நான் ஒரு முறை பார்க்கட்டுமா என்று கேட்க… “நல்லவேளையாக என்னிடம் கேட்டீர்கள். தயவுசெய்து ஒரிஜினல் வெர்ஷனைப் பார்த்துவிடாதீர்கள். அந்தக் கேரக்டரின் பாதிப்பு துளிக்கூட உங்களுக்கு வந்துவிடக் கூடாது” என்று ஆசாத் படத்தைப் பார்க்கத் தடை போட்டதோடு, ஜெனிலியா, ஹன்ஸிகா இருவரையும் அழைத்து உங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் ராஜா.
ஆசாத் படத்தின் அவுட் லைனை மட்டுமே எடுத்துக்கொண்டு தமிழுக்கு ஏற்பத் திரைக்கதை செய்திருக்கிறேன் என்கிறார் ராஜா.
Aucun commentaire:
Enregistrer un commentaire