பொன்னியின் செல்வன் படத்தை விரைவில் துவங்கவிருக்கும் மணிரத்னம், அதற்கான
முன்னேற்பாடுகளில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரல்லவா? அவரது லேட்டஸ்ட் பர்சேஸ் ஆர்யாதானாம். கல்கி எழுதிய இக்கதை காலத்தை வென்ற காவியமாக விளங்கி வருகிறது. தளபதி படம் உருவான காலத்திலிருந்தே இதிகாச கதைகளை உல்டா அடித்து வரும் மணிரத்னம், இந்த முறை பொன்னியின் செல்வன் படத்தை அப்படியே நேரடியாக திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னேற்பாடுகளில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரல்லவா? அவரது லேட்டஸ்ட் பர்சேஸ் ஆர்யாதானாம். கல்கி எழுதிய இக்கதை காலத்தை வென்ற காவியமாக விளங்கி வருகிறது. தளபதி படம் உருவான காலத்திலிருந்தே இதிகாச கதைகளை உல்டா அடித்து வரும் மணிரத்னம், இந்த முறை பொன்னியின் செல்வன் படத்தை அப்படியே நேரடியாக திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு, விஜய் இவர்களுடன் விஷாலும் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் என்னை யாரும் இது தொடர்பாக அழைக்கவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார் அவர். ஆனால் விஷாலுக்கு பதிலாக இப்போது ஆர்யாவை நடிக்க அழைத்தாராம் மணி.
பெயர் சொல்லும்படி வாய்ப்புகள் அமைந்தால் வேண்டாம் என்று ஒருபோதும் மறுப்பதில்லை ஆர்யா. லிங்குசாமி படம், பூபதி பாண்டியன் படம், மிஷ்கின் படம், மீண்டும் ராஜேஷ் இயக்கும் வேறொரு படம் என்று பலருக்கும் வாக்குறுதிகள் கொடுத்திருக்கும் ஆர்யா, அதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மணியின் அழைப்பை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கும் மேல் என்கிறார்கள்.
அநேகமாக இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கக் கூடும் என்ற பேச்சிருக்கிறது கோடம்பாக்கத்தில்.
Tags : Vijay, Ponniyin Selvan

Aucun commentaire:
Enregistrer un commentaire