கேளடி கண்மணி என்ற ஒரு படம் போதும் டைரக்டர் வசந்த்தின் திறமையை
சொல்வதற்கு! அதன்பின் எத்தனையோ படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அதில் சில வெற்றிப்படங்களாகவும், பல தோல்விப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன. கடைசியாக வெளிவந்த 'சத்தம் போடாதே' படத்தின் டைட்டில் சென்ட்டிமென்ட்டோ என்னவோ, சிறிது காலமாக சத்தமே இல்லை வசந்த்திடமிருந்து.
சொல்வதற்கு! அதன்பின் எத்தனையோ படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அதில் சில வெற்றிப்படங்களாகவும், பல தோல்விப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன. கடைசியாக வெளிவந்த 'சத்தம் போடாதே' படத்தின் டைட்டில் சென்ட்டிமென்ட்டோ என்னவோ, சிறிது காலமாக சத்தமே இல்லை வசந்த்திடமிருந்து.இப்போது மணிரத்னம் இயக்கவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இணை இயக்குனராக பணியாற்றப் போகிறாராம் வசந்த்! ராவணா பட நேரத்தில் எஸ்.எஸ்.ஸ்டான்லி போன்ற டம்மி பீஸ்களையே அருகில் வைத்துக் கொண்டு வேலை பார்த்த மணிக்கு வசந்த் போன்ற நல்ல இயக்குனர்களை வைத்துக் கொள்ள கசக்கவா போகிறது?
இதற்கிடையில் இப்படத்தின் நட்சத்திர தேர்வுகளை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். இன்றைய ஸ்பெஷல் செய்தி, பொன்னியின் செல்வனின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம் அனுஷ்கா!
Tags : Vijay, Ponniyin Selvan

Aucun commentaire:
Enregistrer un commentaire