jeudi 10 mars 2011

பிரம்மாண்ட விழா - இணையும் மூவர்!



ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் சட்டப்படி குற்றம். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, நீதிக்கு தண்டனை போன்ற பல அரசியல் பேசும் படங்களை இயக்கியவர். இதில் விக்ராந்த், ஹரீஸ் கல்யாண், வசந்த் ஆகிய மூவர் நாயகர்களாகவும் பானு, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ, கோமல் சர்மா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.


சத்யராஜ், சுரேஷ், ராதா ரவி, லிவிங்ஸ்டன், இயக்குனர்கள் சீமான், ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர் சமீபத்தில் இயக்கிய படங்களும் ச‌ரி, தயா‌ரித்த படமும் ச‌ரி பெரும் தோல்விகளையே சந்திதது. இந்நிலையில்தான் நடப்பு அரசியலை வைத்து சட்டப்படி குற்றத்தை எடுத்து வருகிறார். இளைஞர்கள் சமூக அவலங்களால் எப்படி கெட்டுப் போகிறார்கள் என்பதும், அவர்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுமே படத்தின் கதையாம். 

முக்கால்வாசி படத்தை அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கியிருப்பதாக சொல்கிறார் எஸ்ஏசி. தேர்தலுக்கு முன் படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதால் அவசர அவசரமாக படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. படத்தை இம்மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை விரைவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் கலந்துகொண்டு பாடல் கேசட்டை வெளியிடுமாறு ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டுள்ளார். இப்படம் அரசியல் விஷயங்களை சொல்வதாலும், தேர்தல் நேரம் என்பதாலும் ஜெயலலிதா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். 
இப்படதின் பாடல்களை ஜெயலலிதா வெளியிட நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. 

தன் அப்பா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் இல்லாமலா? ஆக, ஒரே மேடையில் ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் என மூவரும் இருப்பார்கள் என தெரிகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.   

இப்படத்தை பொருத்தவரை தற்கால அரசியலை குறிவைத்து எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்தான் பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள்.


Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...