jeudi 25 novembre 2010

காவலன் இசை டிசம்பர்-1 முதல் செவிகளுக்கு!

இளைய தளபதி விஜய் நடித்துள்ள “காவலன்” படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் செவிகளுக்கு விருந்து படைக்கவிருக்கிறது. எஸ்… காவலன் படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 1-ம் தேதி நடைபெறவிருக்கிறது. வித்யாசாகர் இசையமைப்பில் சித்திக் இயக்கத்தில் வெளிவரவிருக்கிறது காவலன். இதற்குமுன்பு விஜய்-வித்யாசாகர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“ப்ரண்ட்ஸ்” படத்திக்கு பிறகு விஜய்-சித்திக் இணையும் படமென்பதால் “காவலன்” படத்திற்கு அதிகமான எதிப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் “காவலன்” படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சரவணா ( Tantra Films ), சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் “காவலன்” படத்தை வெளியிட 6 வார கால தடை தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் அனைத்து பிரச்சினைகளையும் சுமூகமாக முடித்து திட்டமிட்டபடி டிசம்பரில் படத்தை திரைக்கு கொண்டுவர வேண்டும் என விரும்புகிறாராம் விஜய். அதனால் அனைத்து தடைகளையும் தாண்டி “காவலன்” டிசம்பரில் திரைக்கு வருவான் என நம்பலாம். விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவருவான் இந்த “காவலன்” என்கிறார்கள் படக்குழுவினர்.
மொத்தத்தில் டிசம்பரில் மீண்டும் ஒரு தீபாவளி சரவெடி ரெடி!

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...