mercredi 24 novembre 2010

காப்பி அடிக்க விரும்பவில்லை

மற்றவர்களுடன் என்னை ஒப்பிடுவதை விரும்பவில்லை என்றார் இலியானா. ‘3 இடியட்ஸ்’ ரீமேக்கில் நடிக்க, இலியானாவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி இலியானா கூறியதாவது:

எனது சம்பளம் அதிகமா குறைவா என்பது எனக்கு தெரியாது. மற்ற நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதும் எனக்கு தெரியாது. அவர்களுடன் என்னை ஒப்பிடவும் விரும்பவில்லை. எனது தகுதிக்கு ஏற்ப சம்பளத்தை கேட்கிறேன். தருகிறார்கள். அவ்வளவுதான். இதுபற்றி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.

சினிமாவுக்கு வந்த புதிதில் நான் நடிக்கும் வேடங்களை பற்றி அதிகம் யோசித்து, குழப்பிக் கொள்வேன். இப்போது தெளிவடைந்துவிட்டேன். ‘நம்பர் ஒன் பட்டியலில் இருக்கிறீர்களா?’ என கேட்கிறார்கள். நம்பர் பட்டியலில் என்னை இணைத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. டாப் பட்டியலில் எனது பங்கு இருந்திருக்கிறது. ஒருமுறை உச்சத்தை தொட்டுவிட்டால் அடுத்து கீழ் நோக்கித்தான் வர வேண்டும். எனவேதான் இது பற்றி நினைப்பதில்லை.

ஷங்கரின், ‘3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தை இந்தியில் பார்க்கவில்லை. ஒருமுறைக்கு 2 முறை அந்தப் படத்தை பார்த்துவிட்டு, கரீனா கபூரின் நடிப்பை காப்பி அடிக்க விரும்பவில்லை. இந்த வேடத்தை எனது ஸ்டைலில் நடிக்கவே விரும்புகிறேன். இவ்வாறு இலியானா கூறினார். 


Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...