lundi 22 novembre 2010

விஜய் வேகம் காட்டவில்லை

ஹிந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட 3 இடியட்ஸ் தமிழ் பதிப்பில் நடிப்பதட்காக தற்போது நடித்து வரும் வேலாயுதத்தினை விரைவாக முடிப்பதில் முனைப்பாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளயாகியுள்ளன.இது பற்றி விஜய்க்கு நெருங்கிய நபர் ஒருவர் கூறுகையில் விஜய் நிண்டகாலமாக சினிமாதுறையில் இருக்கிறார் அத்துடன் நல்லநிலையில் இருக்கிறார்,மேலும் அவருக்கு ஒவ்வொரு படமும் முக்கியம்,எல்லாவற்றுக்கும் சமஅளவில் முக்கியத்துவம் அளிப்பார்.ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் அவரது கையில் இருக்கும போது கூட ஆறுதலாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் அவற்றை முடிப்பார்.இப்போது கூட அவர் வேலாயுதம் படத்தில் வேகம் காட்டவில்லை என்பதே உண்மையாகும் என்று கூறினார்.தற்போது ரசிகர்கள் எதிர்பாத்துக் கொண்டு இருக்கும் காவலன் பாடல் வரும் 26 தேதி வெளியாக இருக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...