lundi 22 novembre 2010

"நண்பன்" ஆகிறது "3 இடியட்ஸ்"

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர் அடுத்து முழுவீ ச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறார் விஜய்.மாதவன் வேடத்தில் ஜீவாவும் ஷர்மான் ஜோஷி  பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள்.ஷங்கர் இயக்கம் முதல் ரீமேக் 3 இடியட்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.படத்திற்கு ஷங்கர் 3 இடியட்ஸ் பதிலாக நண்பன் என பெயர் சூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


விஜய்-ஷங்கர் முதல்முறையாக கூட்டணிபோடும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரைத்துரையினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இளைய தளபதியுடன் முதல்முறையாக சீனியர் நடிகர் புரட்சி தமிழன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...