இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக இலியானா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. |
இந்தியில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் 3 இடியட்ஸ். வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்த படம். இப்படத்தை ஷங்கர், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார். இதன் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார் இலியானா. கேடி படத்தின் மூலம்தான் இவர் நடிகையானார். ஆனால் கேடி ஓடாததால், அதிருப்தி அடைந்து தெலுங்கோடு நின்று விட்டார். தற்போது ஷங்கர் படம் என்பதால் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கு ஒப்புக் கொண்டு நடிக்கவுள்ளார். இந்திப் படத்தில் கரீனா கபூர் நடித்த வேடத்தில் இலியானா நடிக்கிறார். கரீனா கபூர் அப்படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதை மிஞ்சும் வகையில் இலியானா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இலியானாதான் நாயகியாக நடிக்கவுள்ளாராம். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக நடிப்பார். தமிழில் விஜய்யுடன் ஜோடி போடுவார். இப்படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தி 3 இடியட்ஸை மீண்டும் மீண்டும் பார்த்து ஸட்டி செய்து வருகிறாராம் இலியானா. |
lundi 29 novembre 2010
விஜய்யுடன் ஆட்டம் போடும் இலியானா
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire