lundi 29 novembre 2010

விஜய்க்கு சிலை வைத்த கேரள ரசிகர்கள் (படங்களுடன்)

கேரளாவில் எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத பெருமை இளையதளபதி விஜய்க்கு கிடைத்துள்ளது. கேரள மாநில ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர் ஒத்தப்பாலம் அருகே உள்ள ஷோரனூரில். தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். கில்லி, போக்கிரி, வேட்டைக்காரன் போன்ற படங்கள் கேரளத்திலும் 100 நாட்கள் ஓடின.
விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துவது கேரள ரசிகர்களின் வழக்கம். இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைக்கும் அளவுக்குப் போய்விட்டனர். இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுகிறது.
சமீபத்தில் ஒத்தப்பாலம் அருகே தனது காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் இந்த சிலையை ஒரு தேரில் வைத்து இழுத்து வந்து காட்டினார்களாம் ரசிகர்கள். இதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார் இளையதளபதி விஜய்.
இது குறித்து பி.ஆர்.ஓ. பிடி.செல்வகுமார் :
“ஷோரனூரில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல்முறை. விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்” என்கிறார் விஜய்யின் மேனேஜரும் பி.ஆர்.ஓ.வுமான பிடி செல்வகுமார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...