ஏறத்தாழ அதிகாரபூர்வமாகவே கசிந்துவிட்டது அந்த தகவல். த்ரி இடியட்ஸ் ரீமேக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் விஜய். ஷங்கரின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னால் என்ன நடந்ததோ, தனது மனக்குமுறல்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.விடம் கொட்டி தீர்த்தாராம் எஸ்.ஏ.சி.
போயஸ் கார்டனுக்கு அவர் போய் சேர்ந்த நேரம் யாருக்கு நல்ல நேரமோ, விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஏனென்றால் சொல்லி சொல்லி சிலாகிக்கும்படி அமைந்ததாம் வரவேற்பு. யாராக இருந்தாலும் போயஸ் கார்டனுக்கு வெளியில்தான் காரை விட வேண்டும். சிறிது நேர நடை பயிற்சிக்கு பின்தான் அம்மாவை தரிசிக்க முடியும். ஆனால் எஸ்.ஏ.சி யின் கார் போர்டிகோ வரை அனுமதிக்கப்பட்டதாம். கிட்டதட்ட முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்களாம் இருவரும்.
இந்த சந்திப்புக்குப் பின் ‘காவலன்’ பட வெளியீட்டை பொங்கல் வரை ஒத்தி வைத்திருக்கிறார்கள். ஜனவரி 17 ந் தேதி அநேகமாக திருச்சியில் தனது முதல் அரசியல் மாநாட்டை விஜய் கூட்டினாலும் ஆச்சர்யமில்லை என்கிறது அரசியல் வட்டாரம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire