தலைவலி போய் திருகுவலி வந்திருக்கிறது ஷங்கருக்கு. ஏதோ காரணத்தால் கடைசி நேரத்தில் கையிலிருந்த விஜய்யை காவு கொடுத்துவிட்ட ஒரே காரணத்தால் கால்ஷீட் தேடி இவரே மூவ் பண்ண வேண்டியிருக்கிறது முன்னணி நடிகர்களை. த்ரி இடியட்ஸ் ரீமேக்கில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு ஷங்கர் லேண்ட் ஆன முதல் இடம் சூர்யா வீடுதான்.
ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதென்றால் யாருக்கு கசக்கும்? சந்தோஷமாக ஓ.கே சொன்ன சூர்யா அடுத்தடுத்து சொன்ன இரு கண்டிஷன்கள்தான் ஷங்கரை ஆடிப்போக வைத்ததாம். நம்பர் ஒன்- உடனே என்னால் கால்ஷீட் தர முடியாது. நம்பர் டூ- இந்த படத்தில் நான் நடிக்கணும் என்றால், தெலுங்கிலும் இந்த கேரக்டரை நானே செய்யணும் என்றாராம் சூர்யா.
அங்குதான் ஜர்க் ஆகியிருக்கிறார் ஷங்கர். ஆந்திராவிலும் தன் சக்தியை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் சூர்யா. இதற்கு முன்பு இவர் நடித்த படங்கள் அங்கு சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால்தான் இப்படி ஒரு ஆசை அவருக்கு. ஆனால் இந்த கேரக்டரில் மகேஷ்பாபு என்ற பெரிய ஹீரோவை நடிக்க வைக்க விரும்பி, பெரிய அட்வான்சையும் கொடுத்திருக்கிறது ஜெமினி லேப். இந்த நேரத்தில் மகேஷ்பாபு வேண்டாம் என்றால் கூட பரவாயில்லை. கொடுத்த அட்வான்சை எப்படி திருப்பி வாங்குவது?
“யோசிச்சு சொல்லுங்க” என்று சொல்லியனுப்பியிருக்கிறாராம் சூர்யா.
Aucun commentaire:
Enregistrer un commentaire