இளைய தளபதி நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாக்கிய படம் காவலன் . இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சதி என்று ஒருபக்கம் ஆக்ரோஷப்படுகிறார்கள் விஜய்யும் அவரது அப்பா எஸ்.ஏ.சியும். காவலனை முடக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எந்த படத்தையும் முடக்க நினைக்கவில்லை என்கிறார் உதயநிதி. இந்த நிலையில் ஆலமர விழுதை பிடித்துக் கொண்டு அந்தரத்தில் பறந்து வரும் ஹீரோ மாதிரி வந்து குதித்திருக்கிறார் ஆஸ்கர் பிலிம் ஓனர் ரவிச்சந்திரன்.
தமிழ்சினிமாவின் மிகப்பெரிய ஏரியாவான என்.எஸ்.சி என்ற ஏரியாவை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் ரவிச்சந்திரன் அவர்கள். விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் மூலமாகதான் தமிழ்சினிமாவில் ஒரு நிலையான மற்றும் கௌருவமான இடத்தை பிடித்தார் ரவி. அந்த நன்றிக்கடன் ஒரு புறம் இருந்தாலும் இந்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களில் இவரும் ஒருவர் தான். ஏன் இப்படி இவரும் ? அடுத்து இயக்குனர் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தை தயாரித்துக் கொண்டிருப்பது ஆஸ்கர் பிலிம் ரவிச்சந்திரன்தான்.
முன் சக்கரம் பஞ்சரானால் பின் சக்கரம் சுற்றுவதில் பிரச்சனை ஏற்படுமே! அதையும் மனதில் வைத்துதான் இப்படத்தின் என்.எஸ்.சி ஏரியாவை வாங்கினாராம் ரவி....
இனி எவனாலும் தளபதி படத்த நிறுத்த முடியாது டா..முடிஞ்சா மோதி பாருங்க !!
Aucun commentaire:
Enregistrer un commentaire