இதுவரைக்கும் த்ரி இடியட்ஸ் பற்றி அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து அதிகாரபூர்வமான செய்திகள் வந்ததேயில்லை. இப்போது முதன்முறையாக ஒரு விளக்கம் வந்திருக்கிறது.
இந்த படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. இந்த கேரக்டரில் நடிக்க வேறு பல முக்கிய நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் அந்த நடிகர் யார் என்பதை அறிவிப்போம் என்பதுதான் அந்த விளக்கம்.
நாம் ஏற்கனவே எழுதியிருந்தபடி சூர்யாவிடம்தான் விடாமல் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோரிக்கையாக வைக்கிறாராம் சூர்யா. தெலுங்கிலும் நானே நடிப்பேன் என்று அடம் பிடித்தவர் இப்போது வைத்திருக்கும் கோரிக்கை, தயாரிப்பு தரப்பை ரொம்பவே மிரள வைத்திருக்கிறதாம்.
சம்பளம் பேசும்போதுதான் இந்த ஆம்புலன்ஸ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சூர்யா. அவர் கேட்ட சம்பளத்தை விரல் விட்டு சொல்ல வேண்டும் என்றால் கைவிரல்கள் போதாது. கால் விரல்களையும் சேர்த்தால்தான் முடியும் போலிருந்ததாம். இந்த பிரச்சனையே முடியவில்லை. அதற்குள் இன்னொரு பிரச்சனை. படத்தில் நடிக்கவிருக்கும் இன்னொரு ஹீரேவான ஜீவா, தன்னுடன் நடிக்கப் போகும் வேறொரு ஹீரோவை படத்திலிருந்து நீக்க சொல்கிறாராம். அப்புறம்தான் என் கால்ஷீட் என்கிறாராம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire