இளைய தளபதி விஜய் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “காவலன்” படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 1-ம் தேதி நடைபெரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியை உறுதிசெய்துள்ளது காவலன் டீம். வித்யாசாகர் இசையமைத்துள்ள “காவலன்” படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல் “காவலன்” படத்தின் ட்ரைலரை நாளை முதல் வெளியிடவிருக்கிறார்கள். “ப்ரண்ட்ஸ்” படத்திக்கு பிறகு விஜய்-சித்திக் இணையும் படமென்பதால் “காவலன்” படத்திற்கு அதிகமான எதிப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் இம்மாத இறுதியில் திட்டமிட்டபடி திரைக்கு வரவிருக்கிறது
Aucun commentaire:
Enregistrer un commentaire