jeudi 9 décembre 2010

விஜய்க்கு ஹீரோயின் நான்தான், அசின் இல்லை

தனது வழக்கமான ஃபார்முலா, பஞ்ச் டயலாக்குகள், குத்துப்பாட்டு, அதிரடி சண்டைக் காட்சிகள் இதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு அமைதியான காதலனாய், காவலனில் நடித்து வருகிறார் விஜய். இவரது அமைதியைக் கெடுப்பதற்கென்றே படத்தில் இரண்டு ஹீரோயின்கள்… ஒன்று அசின் அடுத்தது மலையாள புதுவரவு மித்ரா. விஜய்க்கான போட்டியில் ஜெயித்தது நான்தான் என்கிறார் மித்ரா. இந்த கொச்சின் சுந்தரி தமிழுக்குதான் புதுசே தவிர மலையாளத்தில் ஆறு படங்கள் நடித்துவிட்டார். அதுவும் ‘காவலனில்’ ஒரிஜினலான மலையாள ‘பாடிகார்டில்’ நாயகி நயன்தாராவின் தோழியாகவும் நடித்தவர். தமிழிலும் அதே கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
காவலனில் விஜய்யுடன் ஜோடியாக நடிப்பது பற்றி?
“நான் எதிர்பார்க்கவேயில்லை! கேரளாவில் விஜய்க்கு பயங்கரமான ரசிகர், ரசிகைகள் இருக்கிறார்கள். எர்ணாகுளத்தில் நான் படிக்கும் கல்லூரியில் என் கிளாஸிலேயே அவருக்குப் பயங்கர ரசிகைகள் உண்டு. இங்கே விஜய் படம் ரிலீஸ் ஆகும்போதே கேரளாவிலும் ரிலீஸாகிவிடும். அதனால் அவர் படங்கள் எல்லாவற்றையும் மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவோம்.
அவருக்கே நான் ஜோடியாக நடிப்பேன் என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு! இப்போது என் தோழிகள் அந்தப் படத்தைப் பார்க்க பயங்கர ஆவலுடன் உள்ளார்கள்.”
அது ஒரு வில்லி ரோல்தானே?
“ஹீரோயின் தோழியாக வருகிறேன். ஹீரோவை மனதிற்குள் ஆழமாக, வெளியே தெரியாமல் நேசித்து வரும் நான் உள்ளுக்குள் இருக்கும் காதலைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்திவிடுவேன். நெருங்கிய தோழியின் காதலை மறைத்து ஹீரோவை எனக்கு சொந்தமாக்கிக் கொள்வேன். அந்த சமயத்தில் நான்தான் ஹீரோயின். அதற்கப்புறம் நடக்கும் க்ளைமேக்ஸ் என்னை வில்லியாக்கிவிடுமே தவிர அதுவரை ஹீரோயின் அசின் இல்லை, நான்தான்.
மலையாளத்தில் நயன்தாராவுக்கும், தமிழில் அசினுக்கும் தோழி… யாருடன் நெருக்கம் அதிகம்?
“எதையாவது பத்தவக்கிறதுலேயே குறியாய் இருக்கீங்களே… நான் ஒன்றும் ஃபயர் இல்ல…. ரொம்பக் கூல்… இரண்டு பேருமே சீனியர், சின்சியர், சிம்பிள்… அவங்ககிட்ட நிறைய கத்துகிட்டேன். அதைவிட ரொம்ப ஃப்ரெண்ட்லியா ரெண்டு பேருமே ஈகோ இல்லாம இயல்பா பழகினதால இப்பவும் ரெண்டு பேருகிட்டயும் நல்ல ஃப்ரெண்டாவே இருக்கேன்.”
தமிழ்ல பிடிச்ச ஹீரோக்கள் யார்?
“ரஜினி, கமல், விஜய், சூர்யா…”
முதல் இரண்டு சம்பிரதாயம். அடுத்தது கமிட்மெண்ட். நாலாவது அடுத்த வாய்ப்புக்கு ஐஸா?
“நீங்க எப்படி வேணும்னாலும் வச்சுக்குங்க… என் சாய்ஸ் இப்படித்தான்….”
உங்களுக்குப் பிடிச்ச ஒரே விஷயம்?
“நிறைய கனவு காண்பது.”
‘இதுக்கப்புறமுமா?’ என்று நினைத்தபடி மித்ராவிடம் பிரியா விடைபெற்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...