ஏற்கனவே நடிகர் விஜய், ஜெயலிலதாவை சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு நிகழாமல் போனது. இந்த நிலையில் இன்று மாலை ஜெயலலிதாவை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாக கூறப்படும் நடிகர் விஜய் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளாராம். அப்போது தனது அரசியல் திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
அரசியலுக்கு வருவது உறுதி என்று ஏற்கனவே வெளிப்படையாக கூறி விட்டார் விஜய். இருப்பினும் அதற்கு முன்னர் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்கு செய்வதிலும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைப்பது தொடர்பான பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியடும் வகையில் தனது அரசியல் பிரவேச நடவடிக்கைகளை அவர் முடுக்கி விட்டுள்ளார்.
போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை விஜய் சந்திப்பார் என்றும், அரசியல் திட்டங்கள் தொடர்பாக அவர் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யுடன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செல்வார் என்று ஒரு தகவலும், போக மாட்டார் என்று இன்னொரு தகவலும் கூறுகிறது. சந்திரசேகர் ஒரு தீவிர திமுக அனுதாபியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Aucun commentaire:
Enregistrer un commentaire