காவலன் படத்தை சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் மெல்ல மெல்ல விலக ஆரம்பித்திருக்கின்றன. இந்த படத்தை முடக்க சதி என்று ஒருபக்கம் ஆக்ரோஷப்படுகிறார்கள் விஜய்யும் அவரது அப்பா எஸ்.ஏ.சியும். காவலனை முடக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எந்த படத்தையும் முடக்க நினைக்கவில்லை என்கிறார் உதயநிதி. இந்த நிலையில் ஆலமர விழுதை பிடித்துக் கொண்டு அந்தரத்தில் பறந்து வரும் ஹீரோ மாதிரி வந்து குதித்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
தமிழ்சினிமாவின் மிகப்பெரிய ஏரியாவான என்எஸ்சி என்ற ஏரியாவை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் இவர். விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் மூலமாகதான் தமிழ்சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார் ரவி. அந்த நன்றிக்கடன் ஒரு புறம் இருந்தாலும் இந்த படத்தை எப்படியாவது ஓட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். ஏன் இப்படி? அடுத்து விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தை தயாரித்துக் கொண்டிருப்பது ரவிச்சந்திரன்தான். இந்த படம் சரியா வெளிவந்தாதானே தன் படம் வெளிவரும்ங்கற பயம் தான்..
Aucun commentaire:
Enregistrer un commentaire