நடிகர் சங்கத்திற்குள்ளேயே அசினுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
'காவலன்' வெளியாகும் நேரத்தில் இந்தப் பிரச்சினை பெரிய அளவில் தலை தூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குள் அசினிடமிருந்து ஒரு அறிக்கையாவது வாங்கி வெளியிட்டு படத்தை நல்ல முறையில் வெளியிட வேண்டும் என்று துடித்தாராம் நடிகர் சங்க பிரமுகர் ஒருவர்.
இது தொடர்பாக அசினிடம் பேசியபோது, நான் பெரிய தவறு செய்துவிட்டது போல பேசுகிறார்கள், இதே தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் சிங்கள டிவிக்காக நிகழ்ச்சி தயாரித்துக் கொடுக்கிறார்கள் என்றார்.
ஒரு விவகாரத்தை முடிக்கவே அல்லாடும் நேரத்தில் இன்னொரு விவகாரத்தை கிளப்புகிறாரே என்று அதிர்ந்து போயிருக்கிறது சங்கம். |
Aucun commentaire:
Enregistrer un commentaire