திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நடிகர் ஸ்ரீமன் தயாரிக்கும் 'பரிமளா திரையரங்கம்' என்ற திரைப்படம் சின்னாளபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதில் 'ரேணிகுண்டா' தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்த கேரள நடிகை சனுஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நடிகை சனுஷா அளித்த பேட்டி வருமாறு:- நான் கேரள மாநிலம் கண்ணணூரைச் சேர்ந்தவள். சிறு வயதில் இருந்தே மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரத்தில் நடித்து வருகிறேன்.
இதுவரை 33 படத்தில் நடித்துள்ளேன். நான் தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்த 'பாங்கரம்' என்ற படம் பெறும் வரவேற்பைப் பெற்றது.
தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் 'பீமா' என்ற திரைப்படத்தில் த்ரிஷாவின் தங்கையாக நடித்த போது லிங்குசாமியின் உதவியாளர் பன்னீர்செல்வம்தான் என்னை 'ரேணிகுண்டா' படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.
ஊமையாக நடித்த அந்தப் படம் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது 'களவாணி', விமலுடன் 'எத்தன்' என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.
'ரேணிகுண்டா' படத்தில் நடிப்பதற்காக சின்னாளபட்டியில் ஒரு மாதம் தங்கி இருந்தேன். இங்கு மக்கள் பணியாரம், இட்லி, புட்டு செய்து கொடுத்தனர். சின்னாளபட்டி மக்களிடம் நான் மிகுந்த அன்பு வைத்துள்ளேன்.
தற்போது 'பரிமளா திரையரங்கம்' என்ற படத்தில் நடிப்பதற்காக சின்னாளபட்டிக்கு வந்துள்ளது மிகுந்த சந்தோஷத்தைத் தந்துள்ளது. இந்தப் படத்தில் என் தம்பி சனுப்பும் நடிக்கிறான். நான் விஜய்,
தனுஷ், சூர்யா ஆகியோருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire