தமிழகத்தையும் கொஞ்சம் கவனியுங்கள் : அமெரிக்கத்தமிழர்களிடம் நடிகர் விஜய் நடிகர் விஜய் இன்று அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வளைகுடா பகுதிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். வளைகுடா பகுதி இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஓய்வெடுப்பதற்காக அமெரிக்கா வந்திருந்ததாக தெரிவித்ததோடு, தமிழ் ரசிகர்களையும் சந்திக்க ஆசைப்பட்டதாகவும் தெரிவித்தார். அனைத்து ரசிகர்களும் நடிகர் விஜய்-க்கு ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.
பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினர். கலைநிகழ்ச்சியை கடைசிவரை இருந்து முழுவதுமாக ரசித்த விஜய், அனைத்து நிகழ்ச்சிகளையும் பாராட்டினார். ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க, நடிகர் விஜய், "நீயெந்த ஊரு, நானெந்த ஊரு" என்ற பாடலைப் பாடினார். பிறகு ரசிகர்கள் அனைவரும் நடிகர் விஜய்-யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக விஜய் ரசிகர்கள் மத்தியில் மேடையில் பேசியதாவது : உலகில் தலைசிறந்த நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்களின் வளர்ச்சி அளவிடற்கரியது.
அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் என்று கேள்விப்பட்டேன். வந்த இடத்தையும், பணிபுரியும் நிறுவனங்களையும் சிறப்பாக வைத்துக்கொள்வது நல்லதுதான். ஆனால், நீங்கள் எல்லாம் தமிழகத்தையும் கொஞ்சம் மனது வைத்து சிறப்படையச் செய்யுங்கள்" என்று கூறி ரசிகர்களின் ஆரவாரமான கைதட்டல்களைத் தட்டிச்சென்றார். விஜய், தனது அரசியல் பிரவேசம் பற்றி ஏதாவது தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணமாக நடிகர் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், "விஜய் தற்போது அரசியலுக்கு வருவதாக இல்லை" என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தனது உரைக்குப் பின்னர், தனது வரவிருக்கும் புதிய படமான "காவலன்" ட்ரெய்லரை ரசிகர்கள் மத்தியில் வெளியிட்டார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire