lundi 3 janvier 2011

பொங்கலுக்கும் தியேட்டர் இல்லை: 10 புதுப்படங்கள் முடக்கம் விஜய், தனுஷ், கார்த்தி படங்கள் ரிலீஸ்

பொங்கலுக்கு தியேட்டர் கிடைக்காமல் 10 புதுப்படங்கள் முடங்கியுள்ளன. விஜய்யின் “காவலன்”, தனுசின் “ஆடுகளம்”, கார்த்தியின் “சிறுத்தை” மற்றும் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாகியுள்ள “இளைஞன்” ஆகிய நான்கு படங்கள் பொங்கலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
பெருமளவு தியேட்டர்களில் இப்படங்கள் வருகின்றன. பொங்கலை எதிர்பார்த்து மேலும் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் காத்திருந்தன. அவற்றுக்கு தியேட்டர்கள் இல்லாததால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19ல் தொடங்கி ஏப்ரல் 2-ல் முடிகிறது.

அதன் பிறகு ஏப்ரல் முதல் மே வரை தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் உள்ளன. எனவே அப்போதும் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படங்களை திரையிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகை காலங்களில் ரிலீஸ் செய்யுமாறு தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சாதாரண நாட்களிலும் பெரிய படங்கள் வருகின்றன. இதனால் தியேட்டர்கள் தட்டுப்பாட்டில் சிறு பட தயாரிப்பாளர்கள் விழி பிதுங்குகிறார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...