lundi 3 janvier 2011

பொங்கல் திரை விருந்து-முந்தப் போவது யார்?

வந்து விட்டது பொங்கல். இன்னும் 11 நாட்களே பாக்கி உள்ளது. இந்த பொங்கல் தினத்தன்று விஜய்யின் காவலன், தனுஷின் ஆடுகளம், கார்த்தியின் சிறுத்தை ஆகிய மூன்று முக்கியப் படங்கள் திரைக்கு வரவுள்ளன. இவை தவிர மேலும் சில படங்களும் கூட பொங்கலுக்கு திரைக்கு வரக் காத்துள்ளன. ஆனால் இவற்றில் பாதிப் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பொங்கல் பண்டிகையன்றுதான் நிறையப் படங்கள் திரைக்கு வரும். தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த சமயத்தில்தான் நிறையப் படங்களை திரையிடுவார்கள்.

அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு கிட்டத்தட்ட 7 முதல் 8 படங்கள் வரை திரைக்கு வரக் காத்துள்ளன. அவற்றில் முக்கியமானவை காவலன், ஆடுகளம், சிறுத்தை ஆகியவை.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காவலன் உள்ளது. படத்தை வர விடாமல் தடுப்பதாக விஜய் தரப்பு புகார் கூறியுள்ளால் இந்த பரபரப்பு அதிகரித்துள்ளது. தியேட்டர் கூட தர மறுப்பதாக விஜய் தரப்பு குமுறலுடன் உள்ளது. கடும் சிரமத்திற்கு மத்தியில் கணிசமான தியேட்டர்களை பிடித்துள்ளதாக தெரிகிறது.

விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய்க்கும் கூட இந்தப் படம் முக்கியமானது. கடந்த சில படங்கள் ஓடாததால் விஜய் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் அப்செட்டாக உள்ளனர். இளம் தலைமுறை நாயகர்களில் விஜய்க்குத்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். மேலும் விரைவில் அவர் அரசியல் களத்திற்கும் வரப் போகிறார். எனவே காவலனின் வெற்றி வி்ஜய்க்கு முக்கியம்.

அனைத்தும் சுமூகமாகப் போனால் பொங்கல் பண்டிகையின்போது காவலன் தியேட்டர்களை விஜய் ரசிகர்கள் முற்றுகையிடுவது உறுதி.

தனுஷின் ஆடுகளம், கார்த்தியின் சிறுத்தை ஆகியவையும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இவை தவிர முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகியுள்ள இளைஞன் படமும் திரைக்கு வரவுள்ளது.

அனைத்துப் படங்களும் பொங்கலுக்கு முதல் நாள் அதாவது ஜனவரி 14ம் தேதி திரைக்கு வரவுள்ளன. காவலன் படம் உலகளாவிய அளவில் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...