vendredi 7 janvier 2011

புது சிக்கலில் காவலன் மற்றும் வேலாயுதம்!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. துணை தலைவர் நாராயண சாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர், துணை செயலாளர் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விஜய் நடித்த “சுறா” படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு மனிதாபிமான முறையில் பொறுப்பேற்று நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற எங்களது சங்கத்தின் கோரிக்கைகளை இதுவரை விஜய் ஏற்கவில்லை. இதனால் விஜய் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் “காவலன்” மற்றும் புதிய திரைப்படங்களுக்கு தமிழகம் முழுவதும் தொழில் ரீதியாக எந்த ஒத்துழைப்பும் கொடுக்க போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பொங்கலுக்கு “காவலன்” ரிலீசாகவுள்ள நிலையில் மீண்டும் குரல்கொடுத்துள்ளது  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.
விஜய்க்கு ஆதரவாக செயல்படும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நோக்கங்களுக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் செயல்படும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் புதிய திரைப்படங்களுக்கு தமிழகம் முழுவதும் தொழில் ரீதியாக எந்த வித ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். ( விஜய் நடிக்கும் “வேலாயுதம்” படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். காவலனின் NSC உரிமைய வாங்கி வெளியிடுபவரும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான் ).
கல்லூரிகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்க அளித்துள்ளது போல தியேட்டர்களுக்கும் முழு விலக்கு அளித்து திரையரங்கு களின் வளர்ச்சிக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதே போல திரையரங்குகளுக்கு மின் கட்டணத்தையும் குறைத்து வழங்க வேண்டும். இதுதொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரை விரைவில் சந்தித்து பேச உள்ளோம். திரைப்படங்கள் வெளியான 10 நாட்களுக்கு பிறகே கேளிக்கை வரிவிலக்கு சான்றிதழ் கிடைக்கிறது.
அந்த இடைப்பட்ட நாட்களுக்கு கேளிக்கை வரிகட்ட வேண்டும் என்று வணிக வரிதுறை ஆணையர் கூறுகிறார். இதை கண்டித்து சென்னையில் பிப்ரவரி 15- ந்தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தடைகளை தாண்டி காவலன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...