பிறகு அஜீத் ரசிகன் என்று சொன்னார். சிம்புவின் சிலம்பாட்டம் படத்தை அஜீத் குடும்பத்தோடு பார்க்க வந்ததும், சிம்பு பிறந்தநாளில் தன் மனைவி ஷாலினியோடு கலந்து கொண்டதும் இவர்களுக்குள் இருந்த ஒரு நல்ல நட்பை வளர்த்தது. அஜீத் நடிக்கும் மங்காத்தாவில் சிம்பு கௌரவ வேடத்தில் வருகிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தல ரசிகர் இப்போது விஜய்க்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். அதுவும் வார்த்தைக்கு வார்த்தை விஜய் அண்ணா… விஜய் அண்ணா… என்று சொல்லியிருக்கிறார்.
சமீபமாக வானம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகையில் :
நான் பழைய சிம்பு இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு என்னை எனக்கே ரொம்ப புடிச்சிருக்கு. சினிமாவில் இன்னும் நல்ல வித்தியாசமான முயற்சிகளை செய்வேன் என்று சொல்லி அதனால் தான் இந்தப் படத்தில் பரத்துடன் சேர்ந்து நடிக்கிறேன் என்றார். தனுஷின் உத்தமப்புத்திரன் படத்தின் சிறப்புக் காட்சியிலும் சிம்பு கலந்து கொண்டு இதையே தான் சொன்னார்.
என்னப்பா இது புதுசாவுல இருக்கு… சமீபமாக நடந்த தல-தளபதி பர்சனல் சந்திப்பில் சிம்பு கிறங்கி போனாரோ என்னமோ!
Aucun commentaire:
Enregistrer un commentaire