தன்னுடைய சில படங்கள் சரியாக போகாததால் அதிரடியாக இரண்டு வெற்றிகளை கொடுக்கப் போகிறார் விஜய் என்கிறார்கள் கோடம்பாக்க புள்ளிகள். பொங்கலுக்கு வரவிருக்கும் “காவலன்” மற்றும் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் “வேலாயுதம்” ஆகிய படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமையும் என்கின்றனர். காவலன் கதையை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். வேலாயுதமோ திரைக்கதை, பிரமாண்டம் இரண்டையும் நம்பி எடுக்கப்பட்டு வரும் படம்.
இந்தப் படத்துக்காக இயக்குனர் ஜெயம் ராஜா தெலுங்கில் வெற்றிபெற்ற ஆசாத் படத்தின் ஒன் லைனை மட்டுமே எடுத்துக்கொண்டு முதல் முறையாக ஒரிஜினல் ஸ்கிரிப்டை ரெடிபண்ணி இயக்குகிறார். இதனால் தனது சொந்தக் கற்பனையில் உருவான கதையின் காட்சி அமைப்புகளை பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார். தற்போது சென்னை பின்னி மில்லில் வேலாயுதம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இயக்குனரின் முதல் படமான ஜெயம் படத்தில் ரயில் காட்சிகளையும், ரயில்வே ஸ்டேஷன் காட்சிகளையும் வைத்திருந்தார். இந்த செண்டிமெண்ட் வேலாயுதம் படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் தற்போது பின்னி மில்லில் தொடர்ச்சியாக நான்கு ரயில்பெட்டிகளை செட் போட்டு படமாக்கி வருகிறார். அடுத்து விசாகப்பட்டினம் சந்திப்பை ஒட்டி ஒரு தனி ரயில்வே ஸ்டேஷன் செட்டையே போட்டு க்ளைமாக்ஸ் சண்டையை படமாக்க இருக்கிறாராம் இயக்குனர்.
ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்று கேட்டால், விஜய்யை அழைத்துக் கொண்டு ஏதாவதொரு பிரபல ரயில்வே ஸ்டேஷனுக்கு போனால் செக்யூரிடி பிரச்சனை. பர்மிஷன் பிரச்சனை என்று ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், விசாகப்பட்டினம் சந்திப்பை ஒட்டிய ரயில்வே இடத்தையே செட்டுக்காக தேர்தெடுத்து விட்டார்களாம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire