வெகு காலமாகவே சின்ன தயாரிப்பாளர்களை வாழ வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த தயாரிப்பாளர் சங்கம் தற்போதுதான் அதற்கான முழு முயற்சியில் இறங்கியிருக்கிறது. தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற சலுகை எந்த விதத்திலும் சின்ன தயாரிப்பாளர்களுக்கு பயன்படவே இல்லை.
இவர்கள் படங்களுக்கு ஆகிற வசூலுக்கு வரிவிலக்கு என்று பார்த்தால் ஆயிரங்களில் கூட வந்து சேராது. ஆனால் 50 கோடியும் அதற்கு மேலும் செலவு செய்து எடுக்கப்படுகிற படங்களும் அதன் தயாரிப்பாளர்களும்தான் இந்த சலுகையை முழுசாக அனுபவித்தார்கள்.
இதனால் இங்கே கிடைக்கிற கோடிக்கணக்கான வரி விலக்கையும் நடிகர்களுக்கு சம்பளமாக கொட்டிக் கொடுத்தார்கள் அவர்கள். அதற்குதான் ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது இப்போது. 75 பிரிண்டுகளுக்கு மேல் திரையிடப்படும் படங்களுக்கு 15 சதவீத வரி போடும்படி தயாரிப்பாளர் சங்கமே அரசை கேட்டுக் கொண்டிருக்கிறது. இது அமலானால் இதற்கு பயந்து கொண்டே 75 பிரிண்டுகளை தாண்ட மாட்டார்கள் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள். சின்ன படம் எடுப்பவர்களுக்கு தியேட்டரும் கிடைக்கும். பிரிண்ட் அதிகம். அதற்கேற்ற வசூல் என்பதால் பெரும் பணத்தை சம்பளமாக கேட்ட நடிகர்களுக்கு அந்த சம்பளத்தில் பாதி கூட வந்து சேராது. இவ்வளவு காலம் சும்மாயிருந்துவிட்டு விஜய் படம் வெளியாகும்போது மட்டும் இப்படி ஒரு விதியை கொண்டு வந்தால் எப்படி என்று குமுறுகிறார்கள் பலர். ஏற்கனவே பெரும் பிரச்சனையில் இருக்கும் விஜய் படமான காவலன் இந்த பொங்கலுக்கும் வராது என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி. இதனால் சிங்கம் தயாரிப்பாளருக்கும் திடீர் அதிர்ச்சி. பா.விஜய் என்ற சுமாரான ஹீரோ படத்திற்கும் கூட சிக்கல்தானாம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire