குப்புற தள்ளுன குதிரை குழியும் பறிச்சா என்னாகும்? அதுதான் நடந்திருக்கிறது ஷக்தி சிதம்பரம் விவகாரத்தில். காவலன் படத்தை இவர்தான் வாங்கி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறார்.
இந்த படத்தை வாங்கியதில் இருந்தே ஆங்காங்கே விஜய்க்கு எதிராக பிரச்சனைகள். இதில் பணம் போட்ட இவர்தான் அல்லாடிக் கொண்டிருக்கிறார். முன்பு வேறு படத்திற்காக வாங்கிய கடனுக்காக இவர் வீட்டை கூட ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியது வங்கி ஒன்று. இந்த லட்சணத்தில் மன்மதன் அம்பு படத்தின் சில ஏரியாக்களை வாங்கியிருந்தாராம் அவர். சரியான அடி. இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் அந்த பக்கமே போயிருக்க மாட்டேனே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
வேடிக்கை என்னவென்றால், அதிமுக முன்னாள் மந்திரிகள் இருவர்தான் இவருக்கு பைனான்ஸ் பேக்ரவுண்ட். ஆனால் இவர் படத்தின் சேட்டிலைட்டை விற்றது சன் டி.விக்கு. மன்மதன் அம்புவின் தயாரிப்பாளரும் திமுக பிரமுகரின் மகன். கேட்டால் கதைக்கு ஏது அரசியல் என்பார்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire