இந்தியில் சக்க போடு போட்ட "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் வெளிவருகிறது. இப்படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்குகிறார். இதில் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் நடிக்கின்றனர். முதல்கட்ட சூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் ஊட்டியில் நடைபெற்றது. தற்போது இசையமைப்பிற்காக லண்டன் சென்றுள்ளார் ஷங்கர்.
இந்நிலையில் நண்பன் படத்திற்கு போட்டியாக அதே பெயரில் "நண்பா - 2இடியட்ஸ்" என்ற படம் உருவாகி வருகிறது. இந்தபடத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். படத்தில் நாயகனாக சாந்தனு, நகுல் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகியாக நிகீஷா படேல் நடிக்கிறார். தமிழில் இவர் நடிக்கும் முதல்படம் இது.
ஷங்கரின் நண்பன் படத்துக்கு போட்டியாக இந்த படத்தை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்று இயக்குநர் அதியமானிடம் கேட்டால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவருடன் போட்டி போடுவதற்காகன அவசியமும் இல்லை. இந்த தலைப்பு ஏற்கனவே நான் தேர்வு செய்தது தான், படத்தின் கதைக்கு மிகவும் பொறுத்தமாக அமைந்ததால் இந்த தலைப்பையே வைத்துவிட்டேன் என்கிறார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire