அஜீத் – விஜய் இடையேயான நட்பு இறுக்கமாகி இருக்கிறது. எந்த அளவுக்கு இறுக்கம் என்றால், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று முடிவு எடுக்கும் அளவுக்கு! ‘மங்காத்தா’ பட பப்ளிசிட்டி சமயம், இந்தத் தகவலைத் தெரிவிக்கலாம் என்று ரகசியம் காக்கிறார்களாம்!
இருவரையும் இணைத்து இயக்குவது..? வெங்கட் பிரபு! இவர் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை அஜீத்- விஜய் இருவரிடமும் சொல்லி இருக்கிறார். அவர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ‘எனக்கு அந்த கேரக்டர்!’ ‘எனக்கு இந்த கேரக்டர்!’ என்று மல்லுக்கட்டத் துவங்கியிருக்கிறார்கள். அரண்டு போன வெங்கட், ‘அதுக்குள்ள ஏன் அவசரம்? இன்னும் நான் ஸ்க்ரீன்ப்ளே சரி பண்ணிக்கிறேன்!’ என்று கூறியிருக்கிறாராம்.
‘அமிதாப், தர்மேந்திரா சேர்ந்து நடிச்ச ‘ஷோலே’ இந்திய சினிமாவில் மைல்கல். அது மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை. பவர்ஃபுல் ஆக்ஷன் சேருங்க, கலர்ஃபுல் காதல் சேருங்க, சியர்ஃபுல் காமெடி சேருங்க!’ என்று வெங்கட் பிரபுவின் தோள் தட்டி அனுப்பி இருக்கிறார்கள் இருவரும்!
Aucun commentaire:
Enregistrer un commentaire