jeudi 17 février 2011

விஜய், தனுஷ் பேச மாட்டேங்கறாங்க – பீலிங்கில் நடிகை


என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ… உன்னைக் கண் கலங்காம வெச்சுக் காப்பாத்துறேன்’னு நிறையக் காதல் கடிதங்கள்! ‘இந்தச் சேலை உங்களுக்கு சூப்பரா இருக்கும். கட்டிக்கோங்க ப்ளீஸ்!’னு சேலை பார்சல்ல அவங்க போட்டோஸும் வெச்சு அனுப்புவாங்க. அதையெல்லாம் பார்த்துட்டு என் தம்பி அர்ஜுன், ‘ஹேய்ய்ய்… எனக்கு மச்சான் கிடைச்சுட்டான்’னு கத்திட்டே வீட்டைச் சுத்தி ஓடுவான். ஒரு சினிமா ஆர்ட்டிஸ்ட் என்பதைத் தாண்டி, என் மேல இவ்வளவு அன்பு காட்டுறாங்களேன்னு நினைக்குறப்போ, சந்தோஷமா இருக்கு. தேங்க்ஸ் டு சினிமா!”- அன்பு ததும்புகிறது அனன்யா குரலில்.
” ‘நாடோடிகள்’ படத்துல நடிச்சாலும் நடிச்சீங்க… கிட்டத்தட்ட நாடோடி மாதிரிதான் ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஓடிட்டு இருக்கீங்களே?”
”ஹ்ம்ம்… ஆமால்ல! ஆனா, ‘நாடோடிகள்’ படத்துக்குப் பிறகு, தமிழில் ரொம்ப நல்ல வாய்ப்புகள் வரவே இல்லையே! ‘சீடன்’ படத்தில்தான் நல்ல ஸ்கோர் பண்ற வாய்ப்பு கிடைச்சது. உடனே கமிட் ஆகிட்டேன். ஒருநாள் ஏ.ஆர். முருகதாஸ் சார் போன் பண்ணி, ‘நான் தயாரிக்கும் படத்தை என் இணை இயக்குநர் டைரக்ட் பண்றார். அதில் நீங்க நடிக்கணும்’னு கேட்டார். ‘ஆஹா’ன்னு உடனே கால்ஷீட் கொடுத்துட்டேன். ‘அங்காடித் தெரு’ மகேஷ§க்கு ஜோடியா ஒரு படத்தில் நடிக்கிறேன். அடுத்து பிரியதர்ஷனிடம் இணை இயக்குநரா இருந்த அஜீத் மேனன் ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் படம் இயக்குறார். இந்தியில் மாதவனோடும், தமிழில் விஜய்யோடும் நடிக்கிறேன். கேரியர் கிராஃப் இப்பதான் டிக் அடிக்குதுன்னு தோணுது. உங்க ஆசீர்வாதம்லாம் வேணும்!”
”அதுக்குள்ள மோகன்லால் கூடலாம் நடிச்சீட்டீங்க போல?”
”ஆமா… அதுவும் டபுள் ஜாக்பாட்! ‘சிகார்’, ‘காந்தஹார்’னு அடுத்தடுத்து ரெண்டு படம் அவரோடு நடிச்சேன். ‘சிகார்’ படத்தில் 1,500 அடி பள்ளத்தாக்கில் தொங்குற என்னை லால் சார் காப்பாத்துற மாதிரி ஸீன். ‘டூப் போடாமல் நானே நடிக்கிறேன்’னு அடம் பிடிச்சேன். லால் சார் டென்ஷன் ஆகிட்டார். ‘திமிர் பிடிச்சவங்க, மூளை இல்லாதவங்கதான் இந்த மாதிரி பண்ணுவாங்க’னு திட்டினார். ஆனாலும், விடாம மல்லுக்கு நின்னு பெல்ட் கட்டிக்கிட்டு நடிச்சேன். ஷாட் முடிஞ்ச தும் ‘இனிமே நீதான் கேரள விஜயசாந்தி’ன்னு லால் சாரே பாராட்டினார். அதுதானே வேணும்!”
”தமிழ் சினிமாவில் யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?”
”ஃப்ரெண்ட்ஸா..? நானே நொந்து போய் இருக்கேன். ‘சீடன்’ படத்துக்காக தனுஷ் கூட முதல் நாள் ஷூட்டிங். ரொம்ப அமைதியா இருந்தார். ‘சார், உங்க ‘குட்டி’ படம் பார்த்தேன். நல்லா இருந்துச்சு’ன்னு சொன்னேன். ‘ஓ.கே. தேங்க்ஸ்’னு மட்டும் சொல்லிட்டு, இன்னும் அமைதி ஆயிட்டார். ஷூட்டிங் டயலாக் இல்லாம மொத்தமா நாங்க பேசிக்கிட்டதே அவ்வளவுதான். கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் ‘பெஸ்ட் தமிழ் கமர்ஷியல் ஹீரோ’ விருது வாங்க வந்திருந்தார் விஜய். அவரைப் பார்த்ததும் எனக்கு பரபரன்னு உற்சாகம் ஆயிடுச்சு. வாலன்டியரா போய்அறிமுகப் படுத்திக்கிட்டு, ‘சார்… நான் உங்க படத் தில் நடிக்கிறேன்’னு சொன்னேன். நிமிர்ந்து பார்த்தவர், ஒரே வார்த்தையில் ‘தேங்க்ஸ்’னு முடிச்சுட்டார். ஏங்க, உங்க ஹீரோஸ்லாம் என்கிட்ட பேசமாட்டேங் குறாங்க. நான் ரொம்ப நல்ல பிள்ளைங்க. என்கிட்ட பேசச் சொல்லுங்க… ப்ளீஸ்!”

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...