mardi 8 février 2011

மணி ரத்னம் இயக்கத்தில் விஜய், விக்ரம், விஷால்?


மணி ரத்னம் இயக்கத்தில் விஜய், விக்ரம், விஷால் மூவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

விக்ரம் - மணிரத்னம் கூட்டணியில் அண்மையில் வெளிவந்த படம் 'ராவணன்'. 

மணி ரத்னம் அடுத்து இயக்கும் படம் என்ன? என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவரது புதிய புராஜக்டில் விஜய், விக்ரம் மற்றும் விஷால் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் மணிரத்னம் கடந்த இரண்டு நாட்களாக விக்ரமுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனை அடுத்து விஜய் மற்றும் விஷால் இடமும் கதை விவாதத்தில் ஈடுபடுவார் என்று கூறுகிறார்கள்.

நடிகர் விஜய், ராஜா இயக்கத்தில் வேலாயுதம், ஷங்கரின் இயக்கத்தில் நண்பன் இப்படங்களை அடுத்து இயக்குனர் சீமான் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் விஷால், பாலாவின் இயக்கத்தில் அவன் இவன், பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படமும், இப்படங்களை அடுத்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் பட்டத்து யானை ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் எப்படி மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்குவார்கள் என்று பேச்சுகள் நிலவி வருகின்றன.

இது குறித்து ஒரிரு நாட்களில் முழுமையான தகவல்களை எதிர்பார்க்கலாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...