கார்த்தியின் அடுத்தப்பட இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி இன்னும் சுடசுட அப்படியே இருக்கிறது. இடையில் பொம்மரிலு பாஸ்கர் என்ற தெலுங்குப்பட இயக்குனர் கார்த்தியிடம் கதை சொல்லியிருந்தார்.
அவருக்குதான் அடுத்த படம் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது ஆட்டத்தை குளோஸ் பண்ணி அனுப்பிவிட்டார்களாம் கார்த்தி தரப்பிலிருந்து. காரணம் இவர் இயக்கி தெலுங்கில் வெளிவந்த ஆரஞ்ச் ரெண்டே நாளில் வெளுத்துப் போனதுதான்!இவரது சேரில் இப்போது உட்கார்ந்து கார்த்தியுடன் கதைத்துக் கொண்டிருப்பவர் கருணாகரன் என்ற இயக்குனராம். இவரும் தெலுங்கில் முக்கியமான இயக்குனர்தான். அடிப்படையில் தமிழரான இவர் பவன் கல்யாண் நடிப்பில் ஆனந்த மழை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தெலுங்கர்களை கவர்ந்தவர். அநேகமாக இவருடைய இயக்கத்தில்தான் கார்த்தி அடுத்த படத்தில் நடிப்பார் என்று கிசுகிசுக்கிறார்கள்.
Aucun commentaire:
Enregistrer un commentaire