ராகுல் காந்தியின் டெக்னிக் இந்த தேர்தலில் செல்லுபடியாகுமா இல்லையாதெரியாது. ஆனால் அவரது அணுகுமுறை சற்று வித்தியாசமாகதான் இருக்கிறது. சென்னைக்கு வந்திருந்த போது இங்கிருக்கும் எழுத்தாளர்களையும் சமூக நல ஆர்வலர்களையும் சந்தித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் அவர். சமீபகால தலைவர்களில் வேறு யாராவது இப்படி செய்திருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். அதே நேரத்தில் இந்த பேச்சு வார்த்தை சந்திப்பெல்லாம் ஒரு பலனையும் விளைவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்திலிருந்து யார் போனாலும் உடனடி அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும் போலிருக்கிறது ராகுல் விஷயத்தில். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ராதாரவி போய் ராகுலை சந்தித்துவிட்டு வந்ததும், நடிகர் விஜய் சந்தித்து விட்டு வந்ததும் மக்களுக்கு நினைவிருக்கலாம். லேட்டஸ்ட் சந்திப்பு இதுதான்.
பிரபல இயக்குனர் மணிரத்னமும், இந்தி நடிகர் விவேக் ஓபராயும் ராகுலை சந்தித்திருக்கிறார்கள். சென்னையில் துவங்கப்படவுள்ள சமூக நல அமைப்பு தொடர்பானதாம் இந்த சந்திப்பு. மணிரத்னமும் விவேக் ஓபராயும் இணைந்து இந்த அமைப்பை துவங்குவார்கள் போல தெரிகிறது. மணிரத்னம் ஆல் இண்டியா இயக்குனர் என்பதால் ராகுல் வீட்டில் அவருக்கு நல்ல மரியாதை என்கிறார்கள்!
விவேக்கும் மணிரத்னமும் இணைந்து தமிழ்நாட்டில் ஏதாவது செய்யப் போனால் அதற்கும் 'தனி' மரியாதை கிடைக்கும்!
Aucun commentaire:
Enregistrer un commentaire