திருச்சியில் சங்கம் ஓட்டலில் தங்கியிருந்த ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசினார். அவர் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கிறார். அது மட்டும் இல்லாது விஜய்யின் மக்கள் இயக்கமும் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறது.
இதற்காக ஜெயலலிதா விஜய்க்கு நன்றி தெரிவித்திருக்கிறர். ஆனால் நடிகர் விஜய் இன்னும் இது பற்றி வாய் திறக்கவில்லை.
இது நடந்த அன்று மாலை பொன்னர் சங்கர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கலைஞர், ரொம்பவும் சீரியஸாகவே தன் மேல் வைக்கப்படுகிற விமசனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். அப்போது, ’’சில பேருக்கு யாரும் போராடுவதற்கு எதிரே வராவிட்டால், நிழலோடுவாவது போராடுவார்கள். நிழலோடு போராடிப் போராடிப் பழக்கம்.
அவர்கள் இப்படி நிழலோடு போராடி, என்னை முதலமைச்சராக இருக்கிற என்னை விமர்சித்தால் தான், அவர்கள் நடத்துகின்ற எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு அவர்கள் எண்ணி இருக்கின்ற புதிய கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று கருதி, இன்று தங்களுடைய நேரத்தைச் செலவிடுவது நல்லதல்ல;
அவர்கள் என்னதான் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன் அவர்களுடைய மேன்மைக்காக, அவர்களுடைய நன்மைக்காக, அவர்களுடைய வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
ஜெ, பிச்சாரத்தின் போது விஜய்யின் மக்கள் இயக்க ‘உன்னால் முடியும்’ கொடிகளை அங்கங்கே பார்க்க முடிகிறது. பிரச்சாரத்தில் விஜய் கலந்து கொள்ள ஒரு கண்டிஷனை ஜெ,விடம் வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சி தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்ற வேண்டும் என்பதுதான் அது.
அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா? அப்படி நடந்தால் அதில் விஜய் என்ன பேசுவார்? என்ற பரபரப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆக, அ.தி.மு.க அணியில் ஆல்ரெடி கருப்பு எம்.ஜிஆர், சிவப்பு எம்.ஜி.ஆர் இருக்க, இப்போது இளைய எம்.ஜி.ஆரும் களத்தில் இறங்குகிறார்.
எந்த ஆண்டும் இல்லாத எதிர்ப் பார்ப்புக்குறிய படங்கள் இந்த ஆண்டு வரிசைக் கட்டிக் காத்திருக்கிறது விஜய்க்கு. ஷங்கர் இயக்கத்தில் நண்பன், சீமான் இயக்கத்தில் பகலவன், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், ஷங்கரின் உதவியாளர் இயக்கும் ஒரு படம், அமீருடன் கதை விவாதம் என விஜய்க்கு சினிமா வட்டாரத்தில் நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்க... இந்த அரசியல் அவதாரத்தை எடுக்ககிறார் விஜய்.
Tags : Vijay, Nanban , Ponniyin Selvan ,Velayudham , Pagalavan ,Kannapiran, Shankar Assistant Movie , Vijay In Politics
Aucun commentaire:
Enregistrer un commentaire