vendredi 10 décembre 2010

Plum cake or sugarcane: Vijay confused

Kavalan release date has still not been finalized till now and is contemplating a release between December 24th and Pongal. So what is the status of this film and why the confusion over its release, many wonder.
Some sources in Kollywood say that Vijay's fans want to celebrate the release of their idol’s films grandly and have recommended that Kavalan be released during the Pongal season. The fans apparently are planning a grand celebration and if the release coincides with Pongal, then it would be a double treat for them. Will Vijay and Kavalan’s producers pay heed to this fans’ request?

Vijay, Salman unique in their own way

Director Siddique has just completed shooting Kavalan and even before this film hits the screens, he will move on to direct its Hindi version.
The shooting of the Hindi version will begin on December 19th, in Mumbai. As reported earlier, Salman Khan will play the main lead. Asin declared earlier that she is not interested in doing the same role once again and hence Katrina Kaif has been signed up.
According to Siddique, he had made some changes in Kavalan so that it would suit Vijay’s fans. Similarly, certain important changes have been made for the Hindi film as well, so that Bollywood film buffs do not end up comparing the film with its original version – Bodyguard (Malayalam).

3 இடியட்ஸ் தெலுங்கு ரீமேக்: மகேஷ்பாபுவும் எஸ்கேப்! 4தமிழ்மீடியா எக்ஸ்குளுசிவ்


3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் இருந்து விஜய் வெளியேறிய செய்தியின் சூடு ஆறுவதற்குள் அடுத்து அதிர்ச்சியை அளித்திருக்கிறார் தெலுங்கு நட்சத்திரம் மகேஷ் பாபு.
கடந்த 6-ஆம் தேதி முதல் டெல்லி டெக்ராடன்னில் தமிழ், தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் வேலாயுதம் படத்தை முடிக்காமல் நான் எந்தப்படத்திலும் நடிக்க முடியாது என்றும் உடைகள் மற்றும் ஃஹேர் ஸ்டைல் விவகாரத்தோடு சம்பந்தபடுத்துவது தவறான செய்தி என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இப்போது விஜய் வழியில் மகேஷ்பாவுவும் தெலுங்கு ரீமேக்கில் இருந்து வெளியேறி விட்டதாக நம்பகமான டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு பதிப்பில்  மற்ற இரண்டு கதாபாத்திரங்களுக்கு தமிழ்நடிகர்களை தேர்வு செய்திருப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி மகேஷ் பாபு விலகி விட்டதாகத் தெரியவருகிறது.ஆனால் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளுக்கும் சூரியாவையே தேர்வு செய்து விடலாமா என்று யோசித்து வருகிறாராம் ஷங்கர்!

Vijay Confirms on Shankar’s Moovar

Actor Vijay has finally come out to clear the rumours pertaining to his political ambition and much-talked-about 3 Idiots remake. He has said that reports related to his political entry are baseless and has not walked out of Shankar’s Moovar.
The 36-year-old actor has said that he is thoroughly enjoying his acting career and has not time to think of politics at the moment. He also added that he does not have control over the people who fabricate imaginative stories. Earlier, it was reported that the actor would support AIADMK in the next assembly elections.
Talking about Moovar, he said that he wants makers of the film should make it official whether he is in or out. He admitted that there are some date issues as the director wants bulk dates. Nonetheless, he likes to work with Shankar.


SOURCE:-http://www.tamilwire.com/24152-vijay-opens-politics-shankars.html

Vijay to meet Jayalalithaa?


Media houses in Chennai were gripped with a rumour Thursday evening that actor Vijay would anytime call on former Tamil Nadu Chief Minister and AIADMK general secretary J Jayalalithaa.This resulted in scribes calling their colleagues in cinema and political beats with all anxiousness to know as to when the meeting would take place and whether the actor would enroll himself in the main opposition party of the State.The actor, who apparently has political ambitions, met Jayalalithaa at a marriage function in Chennai recently and cherished his brief meeting with the former Chief Minister in an interview to a magazine.Jayalalithaa, while addressing a massive rally at Madurai, said without mentioning the name of Vijay that an actor was facing troubles and hurdles from the ruling party thanks to his political ambitions.

Vijay is in USA

When the world was waiting for him at the Poes Garden expecting him to meet AIADMK Supremo Jayalalitha to make a political statement, we hear that Ilaya Thalapathi Vijay has quietly flown to America.
 
Our sources say that Ilaya Thalapathi Vijay has flown into Bay Area in California today to spend a week with fans and also enjoy a much deserved vacation.  He will also release the trailer of ‘Kavalan’ in USA during his stay.
 
Vijay fans in the area have made elaborate plans to have a good time with the star. There will be a ‘Vijay Unplugged’ Musical Nite on December 16th and Ilaya Thalapathi will be the guest of honor.
 
So what is there in the mind of Vijay? Our guess is as good as yours.


விஜய்யை சீண்டிய உதயநிதி-பரபர பின்னணி!

சில நாட்களுக்கு முன்பு நறுமுகையில் தியேட்டர் இல்லாமல் தவிக்கும் காவலன் என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். மேலும் அதை உறுதி படுத்தி இருக்கிறது இன்றைய செய்தி. இந்த கட்டுரையை படிக்காதவர்கள் படித்துவிட்டு மேலும் படிப்பது நன்று.
விஜய்யின் பரபரப்பு அரசியல் பிரவேச பேச்சுகளும், காவலன் ரிலீஸ் செய்திகளும் வெளிவரும் வேலையில் அதன் பின்புலனில் நடந்த விசயங்கள் வெளிவரத்துவங்கியுள்ளது. சமீபத்திய தோல்விகளால் துவண்டிருக்கும் விஜய் தன் வெற்றிப்படிக்கட்டை ஆரம்பிக்க பெரிதும் நம்பி இருக்கும் படம் காவலன். ஏற்கனவே சன்பிச்சர்ஸ் வெளியிட்ட வேட்டைகாரன், சுறா இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததாலும், சன் பிச்சர்ஸுடன் இணக்கமான நிலை இல்லை என்பதாலும் விஜய் காவலனை சன்  பிச்சர்ஸ்க்கு கொடுக்க கூடாது என்ற முடிவில்தான் படத்தையே ஆரம்பித்தார்கள்.
சித்திக்கின் வழக்கமான வேகத்தால் படம் முடிவடைந்து படத்தை ரெட்ஜெயண்டும், கிளவுட் நைன் இரண்டுமே கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் விஜயின் மாஸ் ஓபணிங்கை நம்பி பெரிய விலைக்கு வாங்கி ரிலீஸ் செய்ய திட்டமிட்டார் ஷக்தி சிதம்பரம். இதன் பின்புதான் விஜய்க்கு பிரச்சனைகளே ஆரம்பித்தது.
படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் அனைத்தும் சென்ற கட்டுரையில் சொன்னது போல் பெரியவர்களின் கையில் மாட்டிக்கொண்டதால் தியேட்டர் இல்லாமல் தவித்தது காவலன். இதற்கு உதவி கேட்க உதயநிதியை நாடி இருக்கிறார் விஜய். காவலன் ரிலீஸ் தேதியை ஒட்டியே உதயநிதி தயாரித்து கமல் நடித்த மன்மதன் அம்பு ரிலீஸும் முடிவு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. உதயநிதியிடம் காவலனுக்கு தியேட்டர் கேட்க… அவரோ 9 ஆம் தேதி காவலனை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள், ஆனால் எனக்கு 17 தேதி மன்மதன் அம்பு ரிலீஸ் ஆவதற்கு தியேட்டரை கொடுத்து விடுங்கள் என்று உதயநிதி கேட்டிருக்கிறார்.
உதயநிதியின் முதல் படம் குருவி, விஜய் என்ற மாஸுடன் தான் தன் தயாரிப்பு துறைக்கு பிள்ளையார் சுழி போட்டார் உதயநிதி. இதன் அடிப்படையில்தான் காவலனுக்கு உதயநிதியிடம் உதவி கேட்டிருக்கிறார் விஜய்.  ஆனால் உதயநிதியோ… ப்ரண்ட்ஷிப் வேற பிஸினஸ் வேற என்று பதில் சொல்லி விஜய்யை நோகடித்து பதில் சொல்லி இருக்கிறார். விஜய்க்கு காவலனை எளிதில் விட்டு விட முடியாது. காரணம் வரிசையாக 6 படங்கள் கொடுத்து ரசிகர்கள் துவண்டு போய் இருக்கிறார்கள். இனியும் தோல்வி கொடுத்தால் ஓபனிங்க் கிங் இடத்தை இழக்க வேண்டியதாக இருக்கும்.
அதனால் வேறு வழியில்லாமல்  போயஸ்கார்டனுக்கு போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.  விஜய் இதுவரை எப்போதுமே திமுக அனுதாபியாகவே முன்னிருத்தப்பட்டிக்கிறார். அஜித்தும் அதுபோல் அதிமுக அனுதாபிகவே பார்க்கப்பட்டார். விஜய் திமுக அனுதாபியாக இருந்தாலும் அவரின் தந்தை சந்திரசேகருக்கும் அதிமுகவுக்கு எப்போதும் சிக்கல் இல்லாத நட்பு இருந்து வருகிறது. அதனால் காவலனுக்கு ஆதரவு கேட்டு முதலில் சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து பிரச்சனையை எடுத்து சொல்லியதாக தெரிகிறது.
விஜய் நேற்று போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்திப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு நடந்த அரசியல் நிகழ்வுகள் இன்னும் திரைமறைவிலேயே இருக்கிறது. அடுத்த தேர்தலில் விஜய் தனித்து வருவாரா?? அதிமுகவுக்கு ஆதரவு தருவாரா? எல்லாமே பொருத்திருந்து பார்க்கவேண்டும். எப்படியோ போயஸும் விஜய்யும் நெருங்க ஆரம்பித்து விட்டது கண்கூடாகத் தெரிகிறது.

விஜய் நீக்கம்! சூர்யாவிடம் பேசிவிட்டார் ஷங்கர்…

விஜய்க்கு இது என்ன நேரமோ? தமிழில் ஷங்கர் ரீமேக் செய்யும் ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தில் விஜய் இல்லை! விஜய்யின் அரசியல் கூட்டணி யாரோடு? என பரபரப்பு கிளப்பியிருக்கிறது விஜய்யின் சமீபத்திய செய்திகள். ‘த்ரீ இடியட்ஸ்’ ரீமேக்கில் விஜய் நீக்கப்பட்டாரா? இல்லை விலகிக் கொண்டாரா? அப்படியானால் அதற்கு
என்ன காரணம், என்பதே கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் டாக்.

தன் ‘காவலன்’ படத்தை திரையிடுவதிலேயே பல சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், இனி வரும் படங்களுக்கு எதிராகவும் சதிகள் நடப்பதாக நினைக்கிறார் விஜய். ஷங்கரின் ‘த்ரீ இடியட்ஸ்’ படத்திற்காக இந்தியில் அமீர் கான் ஸ்டைலில் தன் தலை முடியை ஒட்ட வெட்டி இருக்கிறார் விஜய். இப்போது அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் மற்றப் படத்தின் சூட்டிங்கையும் தொடர முடியாமல் அவதிப்படுகிறார்.
சரி, விஜய் ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தில் இருந்து நீக்கப்பட காரணம் என்ன?. விஜய் அதிமுக அணிக்கு சாதகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் மேலிடத்தை அதிர வைத்திருப்பதால், அவர் நடிக்கும் காவலன் படத்திற்கு எதிரான சில விஷயங்களை செய்யவும் தனது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது…

அப்படியே டைரக்டர் ஷங்கரையும் அழைத்து கடிந்து கொண்டதாக கிசுகிசுக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் இருக்கக் கூடாது என்று அவர்கள் நிர்பந்தம் செய்ததால் ஷங்கரின் வேண்டுகோளுக்கு இணங்கிதான் விஜய் விலகிக் கொண்டார் என்றும் பேச்சிருக்கிறது. 


ஆனால் விஜய் தரப்போ, த்ரீ இடியட்ஸ் படத்திற்கு கால்ஷீட் பிரச்சனைகள் இருந்தது, அதனால்தான் ஷங்கர் படத்தில் இருந்து விஜய் விலகிக்கொண்டார் என்று சொல்கிறது. இம்மாதம் 17ஆம் தேதி காவலன் யார் தடுத்தாலும் வெளிவரும் என்று சபதமிட்ட படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் அந்த வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

‘காவலன்’ படத்தின் விளம்பரங்களில் சென்னையில் புக்கிங் செய்யப்பட்ட தியேட்டர்களின் லிஸ்ட்டை மட்டுமே வெளியிட்டிருகிறார்கள். வெளியூர் தியேட்டர்களின் பெயர்கள் எதுவுமே இல்லை. (குறிப்பாக வெளியூர் எடிஷன்களில் இல்லை). இதற்கு முன்பு திரையரங்க உரிமையாளர்கள் விஜய்யை நம்பி ஐந்து படங்களில் மோசம் போனதும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். 

அரசியலில் எந்தப் பக்கம் சாயப் போகிறார் விஜய்? விஜய்யின் சினிமா பாதையில் நிகழப்போகிற திருப்பங்கள் என்ன? எனபதே இளைய தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்…

இதில் இன்னொரு சூடான செய்தி ‘த்ரீ இடியட்ஸ்’ படத்திற்காக சூர்யாவிடம் பேசிவிட்டாராம் ஷங்கர்!


jeudi 9 décembre 2010

3 இடியட்ஸூக்கு முன், நிறைய வேலை இருக்கிறது : விஜய் விளக்கம்!

ஷங்கர் இயக்கும் '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் நடிக்க மாட்டர் என செய்திகள் வெளியாகின. ஆனால், இதுபற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை. இதனையடுத்து '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் நடிப்பாரா என்று கேள்விக்கு விடை தெரியாமல் அவரது ரசிகர்கள் தவித்து வந்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஜய்.

இதுபற்றி அவர் கூறுகையில், '3 இடியட்ஸ் படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பதை தயாரிப்பாளர்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். எனக்கு ஷங்கர் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவர் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை எடுத்துச் செல்லும் வகையில் பணிப்புரிந்து வருகிறார். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா ஹீரோ போல் எனக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரமும் வர வேண்டும். எனக்கு கால்ஷீட் பிரச்சினைகள் உள்ளன. காவலன் படத்துக்கு சில சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இதுபோன்ற பெரிய படங்களுக்கு பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

இவற்றைத் தாண்டி படத்தை வெளியிட்டாக வேண்டும். காமெடி, காதல், சென்டி மெண்ட் என முழுக்க முழுக்க ஒரு விஜய் படமாக காவலன் இருக்கும். மலையாள கதையை 75 சதவீதம் மாற்றிவிட்டோம். வேலாயுதம் படம் 50 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் நிறைய வேலை இருக்கிறது இந்தப் படத்தில். இதன் பிறகுதான் மற்ற படங்களில் நடிப்பது குறித்து சொல்வேன்...", என்றார்.


நீங்கள் விஜய் ரசிகன் : அப்படின்னா இளைய தளபதிக்கு ஓட்டு போடுங்க
http://cinema.dinakaran.com/survey/Pollinner.aspx?catid=1

பசு, அரிசி தானம் – விஜயின் வில்லத்தனம்

சில நாட்களுக்கு முன்னர் உடுமலைப்பேட்டையில், ஏழை எளியவர்களுக்கு இளையதளபதி விஜய் 130பசு மாடுகளை தானமாக வழங்கினார். விஜயின் உதவியை பெற்ற பலரும், கலியுக கடவுள்(?) என்றே அவரை பாராட்டிச் சென்றனர். ‘வேலாயுதம்’ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக இந்த ‘பசு தானம்’ வழங்கப்பட்டது.
தற்பொழுது விஜய் மீண்டும் 300 அரிசிப் பைகளை ஏழை மக்களுக்கு வழங்கியுள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் அரிசி பைகளுக்கான மொத்த செலவை சக்தி சிதம்பரமும், பசுக்களுக்கான செலவை ஆஸ்கார் ரவிச்சந்திரனும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
‘காவலன்’ படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழாவிற்கு முதலில் வர மறுத்த விஜய், ‘அவரது பெயரால் அரசிப் பைகள் வழங்கப்படும்’ என்று தயாரிப்பு தரப்பு கூறியவுடன் தான் வர சம்மதித்தாராம். இவ்வாறு பிறர் பணத்தில் விஜய் அரசியல் ஆதாயம் தேட, ரவிசந்திரனும், சக்தி சிதம்பரமும் விஜய் மீது கோபத்தில் உள்ளனராம்.
விஜயின் இச்செயல்கள் அரசியலில் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதையே காட்டுகிறது. மற்றவர் பணத்தை செலவிட்டு, தனது பெயரை நிலைநாட்டுகிற அரசியல் தந்திரத்தை விஜய் அழகாக கற்றுக் கொண்டிருக்கிறார்.
அட படத்துக்கு தயாரிப்பாளர் காசுலதானே விளம்பரம் செய்யணும்.. இதைப்போய் பெருசா பேசுறீங்க?
விஜய் ரசிகர்களுக்கு : இது செய்தி, நறுமுகைக்கு விஜய் மீது தூற்றுவது நோக்கமல்ல..

NEW PETITION SERVED TO KAVALAN

Vijay-starrer Kavalan is facing one hurdle after the other with various issues plaguing the release of the film. First it was a petition filed by a distributor, Saravanan, over a breach of contract with the producer Romesh Babu.
This issue was sorted out by the parties concerned and when everyone heaved a sigh of relief that Kavalan will hit the screens as planned, the Theatre Owners’ Association threatened not to exhibit the film unless Vijay takes care of their losses suffered for screening his previous films, which were box-office duds.
The latest is a case filed by Gokulam Chit Funds claiming that the producer of Bodyguard, based on which Kavalan has been remade, has given them the remake rights. This case came up for hearing recently and the judge ordered that the film’s release cannot be stayed as sought by the petitioner Gokulam Chit Funds. The case has been posted for further hearing this Friday.

அஜித்துடன் மோதுவாரா விஜய்..

ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இந்நிலையில் ‘வேலாயுதம்’ ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்ததாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை பற்றி ஜெயம் ராஜா கூறுகையில் “‘வேலாயுதம்’ படத்தில் இருவித கேரக்டரில் நடிக்கிறார் விஜய். விஜய் இருவித கேரக்டர்களையும் மிகவும் சுவாரசியமாக அமைத்துள்ளேன்” என்றார். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என்று வேலாயுதம் தரப்பில் கூறப்படுகிறது.அதேபோல் அஜித்தின் 50 வது படமான மங்காத்தாவும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த படம் ஆரம்பிக்கும் போதே இந்தப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே முதல் தேதிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு. அதனால் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி “தல” “தளபதி” ரசிகர்களை திக்குமுக்காட வைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


போயஸ் தோட்டத்தில் ஜெ-விஜய் இன்று சந்திப்பு!

ஏற்கனவே நடிகர் விஜய், ஜெயலிலதாவை சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு நிகழாமல் போனது. இந்த நிலையில் இன்று மாலை ஜெயலலிதாவை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாக கூறப்படும் நடிகர் விஜய் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளாராம். அப்போது தனது அரசியல் திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
அரசியலுக்கு வருவது உறுதி என்று ஏற்கனவே வெளிப்படையாக கூறி விட்டார் விஜய். இருப்பினும் அதற்கு முன்னர் தனது ரசிகர் மன்றங்களை ஒழுங்கு செய்வதிலும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைப்பது தொடர்பான பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியடும் வகையில் தனது அரசியல் பிரவேச நடவடிக்கைகளை அவர் முடுக்கி விட்டுள்ளார்.
சமீபத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவருமே அதிமுக கூட்டணியில் நாம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் ஜெயலிலதாவை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் இன்று மாலை ஜெயலலிதாவை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை விஜய் சந்திப்பார் என்றும், அரசியல் திட்டங்கள் தொடர்பாக அவர் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யுடன் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செல்வார் என்று ஒரு தகவலும், போக மாட்டார் என்று இன்னொரு தகவலும் கூறுகிறது. சந்திரசேகர் ஒரு தீவிர திமுக அனுதாபியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஹீரோயின் நான்தான், அசின் இல்லை

தனது வழக்கமான ஃபார்முலா, பஞ்ச் டயலாக்குகள், குத்துப்பாட்டு, அதிரடி சண்டைக் காட்சிகள் இதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு அமைதியான காதலனாய், காவலனில் நடித்து வருகிறார் விஜய். இவரது அமைதியைக் கெடுப்பதற்கென்றே படத்தில் இரண்டு ஹீரோயின்கள்… ஒன்று அசின் அடுத்தது மலையாள புதுவரவு மித்ரா. விஜய்க்கான போட்டியில் ஜெயித்தது நான்தான் என்கிறார் மித்ரா. இந்த கொச்சின் சுந்தரி தமிழுக்குதான் புதுசே தவிர மலையாளத்தில் ஆறு படங்கள் நடித்துவிட்டார். அதுவும் ‘காவலனில்’ ஒரிஜினலான மலையாள ‘பாடிகார்டில்’ நாயகி நயன்தாராவின் தோழியாகவும் நடித்தவர். தமிழிலும் அதே கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
காவலனில் விஜய்யுடன் ஜோடியாக நடிப்பது பற்றி?
“நான் எதிர்பார்க்கவேயில்லை! கேரளாவில் விஜய்க்கு பயங்கரமான ரசிகர், ரசிகைகள் இருக்கிறார்கள். எர்ணாகுளத்தில் நான் படிக்கும் கல்லூரியில் என் கிளாஸிலேயே அவருக்குப் பயங்கர ரசிகைகள் உண்டு. இங்கே விஜய் படம் ரிலீஸ் ஆகும்போதே கேரளாவிலும் ரிலீஸாகிவிடும். அதனால் அவர் படங்கள் எல்லாவற்றையும் மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவோம்.
அவருக்கே நான் ஜோடியாக நடிப்பேன் என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு! இப்போது என் தோழிகள் அந்தப் படத்தைப் பார்க்க பயங்கர ஆவலுடன் உள்ளார்கள்.”
அது ஒரு வில்லி ரோல்தானே?
“ஹீரோயின் தோழியாக வருகிறேன். ஹீரோவை மனதிற்குள் ஆழமாக, வெளியே தெரியாமல் நேசித்து வரும் நான் உள்ளுக்குள் இருக்கும் காதலைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்திவிடுவேன். நெருங்கிய தோழியின் காதலை மறைத்து ஹீரோவை எனக்கு சொந்தமாக்கிக் கொள்வேன். அந்த சமயத்தில் நான்தான் ஹீரோயின். அதற்கப்புறம் நடக்கும் க்ளைமேக்ஸ் என்னை வில்லியாக்கிவிடுமே தவிர அதுவரை ஹீரோயின் அசின் இல்லை, நான்தான்.
மலையாளத்தில் நயன்தாராவுக்கும், தமிழில் அசினுக்கும் தோழி… யாருடன் நெருக்கம் அதிகம்?
“எதையாவது பத்தவக்கிறதுலேயே குறியாய் இருக்கீங்களே… நான் ஒன்றும் ஃபயர் இல்ல…. ரொம்பக் கூல்… இரண்டு பேருமே சீனியர், சின்சியர், சிம்பிள்… அவங்ககிட்ட நிறைய கத்துகிட்டேன். அதைவிட ரொம்ப ஃப்ரெண்ட்லியா ரெண்டு பேருமே ஈகோ இல்லாம இயல்பா பழகினதால இப்பவும் ரெண்டு பேருகிட்டயும் நல்ல ஃப்ரெண்டாவே இருக்கேன்.”
தமிழ்ல பிடிச்ச ஹீரோக்கள் யார்?
“ரஜினி, கமல், விஜய், சூர்யா…”
முதல் இரண்டு சம்பிரதாயம். அடுத்தது கமிட்மெண்ட். நாலாவது அடுத்த வாய்ப்புக்கு ஐஸா?
“நீங்க எப்படி வேணும்னாலும் வச்சுக்குங்க… என் சாய்ஸ் இப்படித்தான்….”
உங்களுக்குப் பிடிச்ச ஒரே விஷயம்?
“நிறைய கனவு காண்பது.”
‘இதுக்கப்புறமுமா?’ என்று நினைத்தபடி மித்ராவிடம் பிரியா விடைபெற்றோம்.

mercredi 8 décembre 2010

‘அரசியலில் இறங்கிவிட்டேனா? - விஜய் ஆவேசம்

‘காவலன்’ படத்துக்காக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தோடு மோதி வருகிறார் இளையதளபதி விஜய்.
தமிழ் சினிமாவை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் ‘3 இடியட்ஸ்’ படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறாராம்.
ஆனால் இந்தப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் பக்கமிருந்து எந்தவித தகவலும் இதுவரை வராத காரணத்தால் வருத்தமடைந்தாரம்.
‘காவலன்’ படத்தின் பாடல்கள் வித்யாசாகரின் இசையில் ரசிக்கும்படியாகவே வந்துள்ளதாம்.
‘காவலன்’ மாதிரி பெரிய படத்துக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ,அது மாதிரி ஆங்காங்கே ஒரு பக்கம் எதிர்ப்பும் இருக்கிறது. ஆகவே பரபரப்பு கிளம்பும் என்று ஆவேசத்துடன் கூறுகிறார் இளைய தளபதி.
நீங்க அரசியலில் முழுமூச்சாக இறங்குவது உறுதியாகிவிட்டதா? என்ற கேள்விக்கு. தமிழ் சினிமாவின் மக்கள் செல்லவாக்கு உள்ள நடிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.
நான் அரசியலில் இறங்குவது தொடர்பாக அடிக்கடி கிளம்பும் கற்பனை ஊற்று தகவல்களை என்னால் தடுக்க இயலாது, என்கிறார்.

Kaavaln Star Vijay Exclusive Interview


The buzz was that Ilayathalapathy Vijay is going to support AIADMK in the next election. The actor is under continuous pressure as his movie Kavalan is under bad terms with the Tamil Nadu Theatre Owners Association on the movie’s release. Adding fuel to the fire, Vijay walked away from Shankar’s remake of 3 idiots.
The walk out has created suspicions as of why he quit the movie. On the other hand it is said that actor Vijay is entering into politics. In an interview in his home in Neelangarai, Fvijay out burst about the issues.
vijay-interview
Are you doing Shankar’s remake of 3 idiots?
The actor said that he would let out the information from the producer’s side and he also has great respect on the director and he loves doing film with him. As there are problems with date, he was not able to decide. 

What about Kavalan ?
After Vidyasagar finishes the re-recording of the movie, the film will be ready for release this month. 

-Rumor about politics ?
*Presently Im happy being an actor. I am not responsible for gossipers. 

-How has Kavalan shaped up?
*Siddique is the master of the movie and he wanted to do the movie in Tamil first but was not able to do it. It was possible after the movie was made in Malayalam as Bodyguard. 

-Is Kavalan the same as Bodyguard ?
*The scenes have been changed 75 percent . The comedy in the first half between the three of us —Vadivel, Asin and me — will be a scream. 

-What is the status of Velayudham?
*Director Jayam Raja, producer Aascar Ravichandran, Genelia and Hansika, and a new actor from Mumbai is playing the villain and hope the movie will become a great success.

Kumudham News abt Kavalan Shooting shared here:

1.Punch in movie : "Aasaipattu adaiyarathukku ithu panam ila gunam, athu pirapuleye varanum 

2. Movie will have like friends Vadivelu Classic comedy "Aaniyeh pudunga vendam" 

3. During bangkok shooting, Martial arts master gave some gift to vijay for acting in stunt scenes without dupe 

4.During mettupalaym train shooting, there was a scene Vijay must get out from running train, unit wanted to shoot it with dupe, but during the making, Vijay suddenly did it and gave surprise 

5.During Pune shoot, Vijay n others stayed in tent in forest area, Unit were shocked to see Big snakes around there at night, But still Vijay made sure he stayed there itself and finished the song shoot

6. Song was taken in mid sea(30km into sea) at malaysia 

7.Rajkiran when came for dubbing, saw few scenes and he got emotional and got tears. After 3 hours of relaxation, he finished dubbing 

8. Last 20 min of the movie will be great highlight as per director view 

9. Its true that asin had few call sheet problems, still Vijay made sure he waited patiently to co operate and completed the movie.

10. During mettupalaym shoot, heavy crowd came to see shooting,it seems Vijay gave many mike conversations to the crowd to make the shoot peaceful.

காவலன்-இசை விமர்சனம்

மன்மதன் அம்பு, எங்கேயும் காதல், ஆடுகளம், வானம் என எஃப்.எம்கள் பிசியாக இருக்கும் வேளை இது. யார் படமாக இருந்தாலும் விஜயின் பாடல்களுக்கு இருக்கும் மவுசு குறைந்ததே இல்லை. அதே எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிறது காவலன் பாடல்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய்-வித்யாசாகர் கூட்டணி. மெலடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்...டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு வரியில் வெர்டிக்ட்டை சொல்லிவிட்டு விமர்சனத்திற்குள் நுழைவோம்.
“காவலன் – விஜய்க்கு திருப்புமுனையாக அமையுமா இல்லையா என்பது இம்மாத இறுதியில் தான் தெரியும். ஆனால் சந்தேகமேயில்லாமல் வித்யாசாகருக்கு ரீஎண்ட்ரீதான்


1) விண்ணைக்காப்பான் – திப்பு,&ஸ்வேதா (பாடல் – பா.விஜய்)

கொஞ்சம் ஒதுங்குங்கண்ணா என்று கபிலனிடம் சொல்லிவிட்டு பா.விஜயிடம் ஒப்படைத்திருக்கிறார் ஓப்பனிங் பாடலை. நீண்ட நாட்களுக்கு பிறகு திப்பு. ஆரம்ப இசை வித்தியாசம் என்றாலும் ட்ரம்ப்பெட், என அதே கருவிகள். உற்சாகம் மேலிடுகிறது. இந்த முறை விஜயின் புகழ் பாடாமல் இறைவனை போற்றி தொடங்குகிறது

விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்

வெறும் குத்துப்பாட்டென ஒதுக்கிவிட முடியாத பீட். வித்யாசாகரின் குத்துப்பாடல்களில் என்னைக் கவர்ந்த அம்சம் எங்கேயும் டெம்ப்போ குறையாமல் போவதுதான். கில்லியின் தொடக்கப் பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை ஆட வைத்துக் கொண்டேயிருக்கும். இதிலும் அப்படித்தான். ஒரு நொடி கூட நிற்காமல் ஓடுகிறது. என்னதான் இறைவனை புகழ்ந்து தொடங்கினாலும் விஜய் ரசிகர்களை குளிர்விக்க ஏதாவது சேர்க்காமல் இருப்பாரா பா.விஜய்?

ஆலால கண்டனே..ஆட்டத்துக்கு மன்னனே..ஆனந்த தாண்டவம் ஆடுவோமே

விஜயே பாடும்படி எழுதியவரிகள். கண்ணனைப் பார்த்து பாடுவது போல் வருகிறது. ஆனால் யாரை குறிக்கிறது என சொல்லவும் வேண்டுமா????????? அடுத்த பாடலுக்கு போகாமல் இங்கேயே சிக்கி தவிக்கிறது என் மனமெனும் சிடி.

2) யாரது.. யாரது – கார்த்திக் & சுசித்ரா ( யுகபாரதி)

வித்யாசாகரின் மெலடிகளுக்கு சில பிரத்யேக முகவரிகள் உண்டு. கேட்கும் முதல் நொடியிலே இதை அப்படியொரு பாடலென வகைப்படுத்தி விட முடிகிறது. இது தனுஷ் பாடல் என்றும் சொல்லலாம். கேட்ட உடனே பிடிக்க வில்லையென்றாலும் கேட்க கேட்க பிடித்து போகிறது. பித்து பிடிக்க வைக்கிறது. சுசித்ராவின் பெயர் இருந்தும் பாடவில்லையென என நினைக்காமல் பார்த்துக் கொள்கிறார் கார்த்திக். வெறும் ஹலோ, ஹம்மிங் மட்டும் சுசித்ராவுக்கு. சித்திக் இதை பார்ப்பதற்கும் இதமான ஒரு பாடலாக படமாக்கியிருப்பார் என நம்புகிறேன்

உச்சந்தலையில் அவள் வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

யுகபாரதி கொஞ்ச காலம் அறிவுமதியின் வீட்டில் தங்கியிருந்தாராம். இப்பவாது நம்பறீங்களா?

3) ஸ்டெப் ஸ்டெப் – பென்னி தயாள் & மேகா (விவேகா)

சில நாட்களாகவே என் காலர் ட்யூன் இந்தப் பாடல் தான். ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மட்டுமே கேட்க முடிகிறது. இருந்த 4 பாடல்களில் அலைபேசி தரத்தில் கேட்ட போதே பச்சக்கென ஒட்டிக் கொண்ட பாடல். பாடியது எனது ஃபேவரிட் பென்னி தயாள். ஆரம்ப இசையை கேட்டவர்கள் யாரும் விஜய் பாடலென்றோ, வித்யாசாகர் பாடலென்றோ சொல்ல மாட்டார்கள். பேஸ், எலக்ட்ரிக் கிட்டார் எல்லாம் பொதுவாக விஜய் ஆண்டனி வசமோ, ஹாரீசின் வசமோதான் இருக்கும். கொஞ்சம் தாங்கப்பா என்று கேட்டு வாங்கியிருக்கிறார் வித்யாசாகர்.

பார்க்கதான் சிறுபுள்ள..கலக்குற பயபுள்ள..
இளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை


ஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.
என்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை


லைட்டாக தளபதி புராணம் பாடினாலும் மற்ற வரிகள் பாடலின் மெட்டுக்கும், மூடுக்கும் நச்சென பொருந்துகிறது. விவேகா கந்தசாமி டைப் பாடலிலிருந்து ஸ்டியரிங்கை இப்படி திருப்பியதற்கு கோடி நன்றிகள். இப்போதைக்கு இதுதான் என் பிக் ஆஃப் த ஆல்பம்.

4) சடசட சடசட – கார்த்திக் (பாடல்- யுகபாரதி)

இந்த மாதிரி பாடலையெல்லாம் கார்த்திக்கிடம் கொடுத்து விட்டால் பாதி வேலை முடிந்தது இசையமைப்பாளருக்கு. கடன் வாங்கிய கிட்டாரை சொன்னதை விட அதிகமாகவே பயன்படுத்திவிட்டார். பல்லவி முடிந்த பின் வரும் கிட்டார் பிட்டை கேட்டுப்பாருங்கள். இப்படியெல்லாம் நம்மால் வாசிக்க முடிந்தால் எத்தனை பேரை ஆச்சரியப்படுத்தலாம்?

கங்கைநதி வெள்ளம் சிறுசங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னஞ்சிறுபிள்ளை ஒரு சொப்பனத்தை வைத்துக்கொண்டு கண்ணுறக்கம் கேட்டுநிக்குதே

யுகந்தோறும் பாரதியென வாழட்டும் யுகபாரதி. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஏனோ குஷி, ப்ரியமுடன் கால விஜய் படங்கள் நினைவில் ஊசலாடி செல்கின்றன.

5) பட்டாம்பூச்சி – கே.கே. & ரீட்டா (கபிலன்)

சுமாரான வேகத்தில் ஒரு டூயட். ஹாயாக அமர்ந்து காலால் தாளம் போட்டுக் கொண்டு விஜயின் நக்கலையும், அசினின் சிணுங்கலையும் ரசித்து மகிழலாம். அதற்கு தோதாக செல்லமாய் சிணுங்கி பாடுகிறார் கே.கே. அப்படி போடு என நயாக்ராவாய் கொட்டிய குரலை அடக்கி ஆள்கிறார் வித்யாசாகர். கபிலனுக்கு பிரமோஷனா என்பது தெரியவில்லை.

அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..
உதடும் உதடும் பேசும்பொழுது உலகை மறந்தேனே

என்ன வேலை சொன்னாலும் அதை செவ்வனே செய்வேண்ணா என்கிறார். நோ நோ இது அரசியல் இல்லை. காதல் மட்டுமே :))

விஜய் ரசிகர்களின் தேர்வு : விண்ணைக் காப்பான்

எஃப்.எம்களின் தேர்வு : பட்டாம்பூச்சி

மெலடி ரசிகர்களின் தேர்வு : யாரது யாரது

நடன ரசிகர்களின் தேர்வு :ஸ்டெப் ஸ்டெப்

விஜய் படத்தின் பாடல்கள் முழுமையாக எல்லோரையும் திருப்தி செய்து பல நாட்கள் ஆகிறது. காவலன் அக்குறையை தீர்க்க வந்தது என்பதில் சந்தேகமேயில்லை. 17 அல்லது 24 ஆம் தேதி படம் வெளிவருவது உறுதி என்று சொல்லியிருக்கிறார்கள் காத்திருக்கிறோம்ண்ணா. உங்களுக்காக பாடலின் சில பகுதிகள் தொகுத்து தந்திருக்கிறேன்.கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

Vijay not out of Shankar's Moovar

Actor Vijay, who was reported to have walked out of Shankar's Moovar, is still very much part of the film. As earlier reported, the actor will play the lead role in 3 idiots remake.

Rumour mills have been working overtime saying that the actor and director have parted ways due to differences of opinion. It also claimed that Vijay was not happy with the way Shankar wanted to portray him in the film. Few reports has also fuelled that Vijay decided to opt out due to clash of dates.

According to sources, Vijay has not gone out of the film. But his busy schedule has forced the director to start the shooting with out him. Soon, he will join the team, adds source. The movie features Ileana D' Cruz, Jeeva, Srikanth, Sathyaraj and others in the cast. Harris Jayaraj is scoring the music and Manoj Paramahamsa is handling the camera.

Vijay's 'Velayudham' will be a summer treat

Vijay's 'Velayudham' which has directed by Jayam Raja and Producer by Aascar Ravichandran of Aascar Films. Genelia and Hansika is doing female lead role in the film, Meanwhile a new actor from Mumbai is playing the villain role in the film. 

There are rumors that the film is the remake of the Telugu film 'Azad' but the director says it is his original script which is an out and out mass film with some peppy number. The film music has scored by Vijay Antony who has already worked with Vijay's 'Vettaikaran'. 

The film will a summer treat for the audience.

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...