jeudi 16 décembre 2010

விஜய் அரசியலுக்கு வர மாட்டார்!

விரைவில் விஜய் அரசியல் பிரவேசம் செய்வார் என்று கூறப்படுகிறது. அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே கூறியுள்ளார் விஜய். இருப்பினும் அதற்கேற்ற சமயம் வரும்போது முடிவெடுப்பேன் என்றும் ரசிகர்களிடம் கூறி வைத்துள்ளார். இடையில் அவரை காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என செய்திகள் வெளியாகின. மேலும் திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் தன் மகன் அரசியலுக்கு வர மாட்டார் என தெரிவித்துள்ளார். நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். எனக்குள்ள சில பிரச்சினைகள் குறித்தும் மக்கள் தலைவர் என்ற முறையில் அவரிடம் சொன்னேன். இதில் மறைத்துப்பேச ஒன்றுமில்லை. என்று கூறிய அவர், தனக்கு காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. கலைஞரை தெரியும், திமுகவைத் தெரியாது. விஜயகாந்தை தெரியும், தேமுதிக தெரியாது... என்று கூறினார். தற்போது விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் உடனடியாகத் தொடங்க மாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அதற்கான அஸ்திவாரம் போட்டு வருகிறேன்...", என்றார்.

Genelia-Hansika: Friends forever

These are the days when catfights are a common thing between actresses if they work together in a film. But Genelia D’Souza and Hansika Motwani stand opposite to this infamous trend.
The actresses, who are sharing the screen space with ‘Ilaya Thalapathi’ Vijay in ‘Velayudham’, a film directed by ‘Jayam’ Raja, share a close friendship and care a lot for each other.
Sources in the unit say they could see Genelia and Hansika chatting with each other with much warmth whenever there is a break during the movie’s shoot. “They are having a blast on the sets,” sources add.
Confirming this, Hansika, who recently watched ‘Orange’, a Telugu film starring Ramcharan Teja and Genelia in lead roles, tweeted: “Saw Orange and I thought that Charan was superb. Genelia was nice.”

Kaavalan in Aascar Ravichandran’s hands

Good news for all Vijay’s fans out there! The distribution rights of Kaavalan for some important districts in Tamil Nadu have been handed over to Aascar Ravichandran. It may be recalled that producer Shakthi Chidambaram bagged the over-all distribution rights of this Vijay starrer earlier.
With Aascar Ravichandran taking up this film under his wings, one can expect Kaavalan promos to reach the hilt. The producer is known for his marketing skills and will leave no stone unturned to make his project a success.
Kaavalan stars Vijay and Asin in the main roles and is directed by Siddique. The film has been produced by Romesh Babu.

3 இடியட்ஸ்க்கு லீவ் விட்ட சத்தியராஜ்

கைநிறைய சம்பளம், கணிசமான அட்வான்ஸ். சத்யராஜை சந்தோஷப்படுத்திய த்ரி இடியட்ஸ், அதே வேகத்தில் அவரை முடக்கியும் போட்டுவிட்டது. இந்த படத்திற்காக ஒதுக்கிய கால்ஷீட் தேதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்புவரை நிரப்பப்படாமல்தான் இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ்.
வீணாதானே போவுது, த்ரி இடியட்ஸ் துவங்குவதற்குள் வேறொரு படத்தில் நடித்துவிட்டு வந்திடலாமே என்று நினைத்தாராம். அந்த நேரம் பார்த்துதான் அழைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்கவிருந்த படத்திலிருந்து கடைசி நேரத்தில் கழன்று கொண்டார் அமீர். இவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்திலிருந்த எஸ்.ஏ.சி சத்யராஜிடம், உடனே ஷுட்டிங் போகணும். தேதி தர முடியுமா? என்றாராம்.
தானா ஊர்ற கேணிய மேலும் பத்தடி தோண்டுன மாதிரி, சும்மாயிருந்த சத்யராஜை சொடக்கு போடுற நேரத்தில் கமிட் பண்ணினாராம் எஸ்.ஏ.சி. சத்யராஜுக்கு ஏற்றது போல புரட்சி, போராட்டம் என்று கதையில் காரமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

விஜய் அரசியலுக்கு வருவார்-எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி!

எனக்கு தலைவர்களைத்தான் தெரியும்… அவர்களின் கட்சிகளைத் தெரியாது, என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அடுத்து தான் இயக்கும் “சட்டப்படி குற்றம்” படத்துக்காக ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்களைப் பார்வையிட வந்திருந்தார் எஸ்.ஏ.சி.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில் :
1982 ல் வெளியாகி வெற்றி பெற்ற “சட்டம் ஒரு இருட்டறை” படத்தை இந்த காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி “சட்டப்படி குற்றம்” என்ற பெயரில் எடுத்து வருகிறேன். முதல் பாதி சென்னையிலும், பின் பாதி காடுகள் நிறைந்த பகுதிகளிலும் காட்சிகள் வருகின்றன. அத‌ற்கான லொகேஷன் பார்க்கத்தான் வந்தேன். நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். எனக்குள்ள சில பிரச்சினைகள் குறித்தும் மக்கள் தலைவர் என்ற முறையில் அவரிடம் சொன்னேன். இதில் மறைத்துப்பேச ஒன்றுமில்லை.
எனக்கு மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்களை தெரியும். அவர்கள் இருக்கும் கட்சியை எனக்கு தெரியாது. காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. கலைஞரை தெரியும், திமுகவைத் தெரியாது. விஜயகாந்தை தெரியும், தேமுதிக தெரியாது… அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்.
அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் கிடையாது. ஆனால் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. மக்களுக்கு நல்லவற்றை செய்யும் கட்சிக்காக வரும் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது என்றார்.
தற்போது விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் உடனடியாகத் தொடங்க மாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அதற்கான அஸ்திவாரம் போட்டு வருகிறேன்… என்றார் எஸ்.ஏ.சி.

ஆஸ்கார் பிலிம்ஸ் வெளியிடும் காவலன்


காவலன் படத்தை சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் மெல்ல மெல்ல விலக ஆரம்பித்திருக்கின்றன. இந்த படத்தை முடக்க சதி என்று ஒருபக்கம் ஆக்ரோஷப்படுகிறார்கள் விஜய்யும் அவரது அப்பா எஸ்.ஏ.சியும். காவலனை முடக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எந்த படத்தையும் முடக்க நினைக்கவில்லை என்கிறார் உதயநிதி. இந்த நிலையில் ஆலமர விழுதை பிடித்துக் கொண்டு அந்தரத்தில் பறந்து வரும் ஹீரோ மாதிரி வந்து குதித்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
தமிழ்சினிமாவின் மிகப்பெரிய ஏரியாவான என்எஸ்சி என்ற ஏரியாவை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் இவர். விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் மூலமாகதான் தமிழ்சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார் ரவி. அந்த நன்றிக்கடன் ஒரு புறம் இருந்தாலும் இந்த படத்தை எப்படியாவது ஓட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். ஏன் இப்படி? அடுத்து விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தை தயாரித்துக் கொண்டிருப்பது ரவிச்சந்திரன்தான். இந்த படம் சரியா வெளிவந்தாதானே தன் படம் வெளிவரும்ங்கற பயம் தான்..

mercredi 15 décembre 2010

காவலன் படம் ரிலீஸில் நெருக்கடி!!

பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம்-விஜய்க்கு பெரும் நெருக்கடி!  விஜய் நடிக்க வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகின்றன. 
காவலன் படம் ரெலீசில் நெருக்கடி 
ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவர் சந்தித்திராத நெருக்கடியை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார்.   அசினுடன் அவர் நடித்துள்ள காவலன் திரைப்படம், எல்லாம் முடிந்த பிறகும் கூட ரிலீசுக்கு வழியில்லாமல் தவிக்கிறது.
  
இதுவரை மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்ட்டு, தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப் போடப்பட்டது காவலன்.  கடைசியாக டிசம்பர் 17 என நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதிக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்றும், அப்படியே கிடைத்தாலும் அடுத்த வாரம் மன்மதன் அம்பு வெளியாகும்போது தூக்கிவிட வேண்டும் என்றும் நிர்பந்திக்க டென்ஷனான விஜய், படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைத்து விட்டார்.


இப்போது பொங்கலுக்கும் கூட இந்தப்படத்துக்கு நல்ல தியேட்டர்கள் தரமுடியாது என்றும் ஏதாவது மூன்றாம் தர திரையரங்குகள்தான் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஏன்?  காரணம், பொங்கலுக்கு கருணாநிதியின் இளைஞன், சன் பிக்ஸர்ஸின் ஆடுகளம், க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸின் சிறுத்தை ஆகிய படங்கள் வெளியாகின்றன.

இளைஞன் படத்தை உதயநிதி ஸ்டாலின் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார். முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டுள்ளார்.  அடுத்து, ஆடுகளத்தை சன் பிக்ஸர்ஸ் ரிலீஸ் செய்கிறார்கள். விஜய் படம் தயாராகும் முன்பே ஆடுகளத்துக்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மூன்றாவது படமான சிறுத்தையை முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் வெளியிடுகிறது. இந்த நிறுவனமும் முன்கூட்டியே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  மன்மதன் அம்பு உள்ளிட்ட மேற்கண்ட படங்களுக்காக நிறைய தியேட்டர்கள் புக் ஆகி விட்டதாக கூறப்பட்டாலும் கூட, காவலனுக்கு தியேட்டர் கிடைக்காமல் போயிருப்பதற்கு 'உண்மை'யான காரணம் என்ன என்பது மற்றவர்களை விட திரையுலகினருக்கு மிக நன்றாகவேத் தெரியும்.

இருந்தாலும் வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு அவர்களை ஏதோ ஒரு 'பாசவலை' கட்டிப் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.  சிங்கம் வேட்டையாடிய இறையின் மிச்சம் கிடப்பதைப் போல, இந்த மூன்று பெரிய நிறுவனங்களின் படங்களுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதியிருந்தால் அது காவலனுக்கு தரப்படும் என்கிறார்கள் எக்ஸிபிட்டர்ஸ் வட்டாரத்தில்.

"ஒருவேளை இப்போது, அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் மன்மதன் அம்பு பொங்கல் நேரத்திலும் ஓடிக் கொண்டிருந்தால், காவலன் ரிலீஸ் பற்றி விஜய் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே...", என்கிறார்கள்.

தன்னைச் சுற்றிலும் கணக்காக 'ஆப்பு' வைத்து விட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள விஜய், தற்போது அதிமுக ஆதரவுப் பிரமுகர்களிடம் உள்ள தியேட்டர்கள் குறித்துக் கணக்குப் போட்டுப் பார்த்துள்ளார். அது கிட்டத்தட்ட 120க்கும் அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கெல்லாம் காவலனை திரையிட அவர் முயற்சிகளை தொடங்கியுள்ளாராம்.

காவலன் ரிலீசில் கை கொடுத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் !!

இளைய தளபதி நடிப்பில்  சித்திக் இயக்கத்தில் உருவாக்கிய படம் காவலன் . இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சதி என்று ஒருபக்கம் ஆக்ரோஷப்படுகிறார்கள் விஜய்யும் அவரது அப்பா எஸ்.ஏ.சியும். காவலனை முடக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் எந்த படத்தையும் முடக்க நினைக்கவில்லை என்கிறார் உதயநிதி. இந்த நிலையில் ஆலமர விழுதை பிடித்துக் கொண்டு அந்தரத்தில் பறந்து வரும் ஹீரோ மாதிரி வந்து குதித்திருக்கிறார் ஆஸ்கர் பிலிம் ஓனர்  ரவிச்சந்திரன்.
தமிழ்சினிமாவின் மிகப்பெரிய ஏரியாவான என்.எஸ்.சி என்ற ஏரியாவை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்  ரவிச்சந்திரன் அவர்கள். விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் மூலமாகதான் தமிழ்சினிமாவில் ஒரு நிலையான மற்றும் கௌருவமான இடத்தை பிடித்தார் ரவி. அந்த நன்றிக்கடன் ஒரு புறம் இருந்தாலும் இந்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களில் இவரும் ஒருவர் தான். ஏன் இப்படி இவரும் ? அடுத்து இயக்குனர் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தை தயாரித்துக் கொண்டிருப்பது ஆஸ்கர் பிலிம் ரவிச்சந்திரன்தான்.
முன் சக்கரம் பஞ்சரானால் பின் சக்கரம் சுற்றுவதில் பிரச்சனை ஏற்படுமே! அதையும் மனதில் வைத்துதான் இப்படத்தின் என்.எஸ்.சி ஏரியாவை வாங்கினாராம் ரவி....

இனி எவனாலும் தளபதி படத்த நிறுத்த முடியாது டா..முடிஞ்சா மோதி பாருங்க !!

சூர்யாவிடம் தவிக்கும் 3 இடியட்ஸ்..

தலைவலி போய் திருகுவலி வந்திருக்கிறது ஷங்கருக்கு. ஏதோ காரணத்தால் கடைசி நேரத்தில் கையிலிருந்த விஜய்யை காவு கொடுத்துவிட்ட ஒரே காரணத்தால் கால்ஷீட் தேடி இவரே மூவ் பண்ண வேண்டியிருக்கிறது முன்னணி நடிகர்களை. த்ரி இடியட்ஸ் ரீமேக்கில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு ஷங்கர் லேண்ட் ஆன முதல் இடம் சூர்யா வீடுதான்.
ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதென்றால் யாருக்கு கசக்கும்? சந்தோஷமாக ஓ.கே சொன்ன சூர்யா அடுத்தடுத்து சொன்ன இரு கண்டிஷன்கள்தான் ஷங்கரை ஆடிப்போக வைத்ததாம். நம்பர் ஒன்- உடனே என்னால் கால்ஷீட் தர முடியாது. நம்பர் டூ- இந்த படத்தில் நான் நடிக்கணும் என்றால், தெலுங்கிலும் இந்த கேரக்டரை நானே செய்யணும் என்றாராம் சூர்யா.
அங்குதான் ஜர்க் ஆகியிருக்கிறார் ஷங்கர். ஆந்திராவிலும் தன் சக்தியை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் சூர்யா. இதற்கு முன்பு இவர் நடித்த படங்கள் அங்கு சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால்தான் இப்படி ஒரு ஆசை அவருக்கு. ஆனால் இந்த கேரக்டரில் மகேஷ்பாபு என்ற பெரிய ஹீரோவை நடிக்க வைக்க விரும்பி, பெரிய அட்வான்சையும் கொடுத்திருக்கிறது ஜெமினி லேப். இந்த நேரத்தில் மகேஷ்பாபு வேண்டாம் என்றால் கூட பரவாயில்லை. கொடுத்த அட்வான்சை எப்படி திருப்பி வாங்குவது?
“யோசிச்சு சொல்லுங்க” என்று சொல்லியனுப்பியிருக்கிறாராம் சூர்யா.

Jiiva on Vijay's role in 3 Idiots

It is well-known that Jiiva is active on social networking sites and gives updates on a regular basis for his fans. But recently, the actor has been silent regarding the 3 Idiots remake which was bothering his curious fans.
Choosing to put an end to his long silence on the subject, Jiiva has said that he has no idea what’s happening with the 3 Idiots project. He added that he is not sure if Vijay is a part of the film or not.
The actor said that he will come up with more updates on 3 Idiots remake soon but for now he is happy that Ko shooting is almost over.


விஜய் Vs தனுஷ்

தனுஷின் அடுத்த படமான ஆடுகளம் பல சிக்கல்களுக்கு பிறகு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது , இதைடுத்து இளைய  தளபதி நடிக்கும் "காவலன்" திரைப்படமும் பொங்கல் அன்றே வெளியிடபடுகிறது .இதனால் தனுஷ் தளபதியிடம் போட்டியிடும் சூழ்நிலை உருவகியிள்ளது , இதனை பத்திரிக்கை நிருபர்கள் தனுஷிடம் கேட்டபோது அவர் கூறியது :
 எனக்கு விஜய் சார் படம்கூட என்னோட படமும் ரிலீஸ் ஆவர்துல எனக்கு பெரிமையவும் இருக்கு அதே சமயம் சுவாரசியமாகவும்  இருக்கு . இதனால நமக்குள்ள போட்டியிடுற மாதிரி இருக்கு என கூறியுள்ளார் .அப்போ ஆட்டதுள்ள தனுஷுயும் இருகாரு ...பாக்கலாம் தனுஷா இல்ல தளபதியானு..!!

அமெரிக்காவில் தளபதி !!

 இளையதளபதி விஜயின் காவலன் திரைப்பட பாடல்கள் கடைசி வாரத்தில் வெளியிடுஆனது . ரசிகர்கள் எதிர்பார்ப்பின்படி பாடங்கள் அற்புதமாக அமைந்துள்ளது . இப்படத்தில் வித்யாசாகர் இசையமைத்துள்ளார் அணைத்து பாடல்களும் சூப்பர் டுபர் ஹிட் . பல புரளிகளுக்கு பின்னல் காவலன் திரைப்படம் இந்த பொங்கலுக்கு தித்திப்பாக வெளியிட இருக்கிறது .

அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள் நடிகர் விஜய்காக - vijay unplugged - music nite என்ற நிகழ்ச்சியை வருகின்ற டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது . இந்த நிகழ்ச்சியில் இளைய தளபதி விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் .

அமெரிகால்வில் உள்ள ரசிகர்களுக்கு இளைய தளபதி விஜயை சந்திக்க இது ஒரு நல்ல வாய்ப்பு
....

விஜய்க்கு துரோகம் செய்யும் சூர்யா !!!

விஜய் அப்போது பத்து படங்கள் நடித்த நடிகர்.சூர்யா அதுவரை எந்த படத்திலும் நடித்ததில்லை. வசந்த் 
இயக்கத்தில் 1997ம் ஆண்டில் வெளிவந்த நேருக்கு நேர் படத்தில் சூர்யா என்ற புதுமுக நடிகருடன் நடிக்க விஜய் எந்த 
தயக்கமும் காட்டவில்லை.அதில் விஜய் என்ற முன்னணி நடிகர் சூர்யா என்ற புதுமுக 
நடிகருடன் இரண்டு ஹீரோ சப்ஜக்டில் நடித்தது பல புருவங்களை உயர்த்தியது. ஆனாலும் விஜய் அதில் நடிக்க 
காரணம் சூர்யா தன் லயோலா கல்லூரி நண்பன் என்பதாலேயே ! அந்த படத்தில் வசந்தும் தன் பங்கிற்கு விளையாடினார்.
ஹிட்டான பாடல்களை சூர்யாவுக்கு தந்து சிம்ரனை சூர்யாவுக்கு ஜோடியாக போட்டு நல்லநல்ல சீன்களை 
சூர்யாவுக்கு ஒதுக்கி… இப்படி பல விஷயங்கள் அந்தப் படத்தில் விஜய்க்கு எதிராகவே நடந்தன. ஆனாலும் விஜய் அதில் 
நட்புக்காக நடித்தார்….காலங்கள் ஓடின  நான்கு வருடங்கள் கழித்து விஜய் லவ் டே,
காதலுக்கு மரியாதை, போன்சூப்பர் ஹிட் படங்களில் நடித்த , தனியாக ஹிட் கொடுக்க முடிகிற 
ஸ்டார்…சூர்யாவோ திரையுலகில் நான்கு வருடங்கள் இருந்தும் 
கூட ஹிட் கொடுக்க முடியாமல திணறிக் கொண்டிருந்தார்… அவர் கேரியரே முடிவுக்கு வந்து விடுமோ என்ற நிலையில் 
அவருக்கு ஒரு மாஸ் படம் தேவைப்பட்டது. அப்போது தான் ஃப்ரண்ட்ஸ் டம் 
ப்ளான் செய்யப்பட்டது. அதில் விஜய்க்கு செக்ண்ட் ஹீரோவாகும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. விஜய் 
நினைத்திருந்தால் சூர்யாவை புக் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். தயாரிப்பாளர் கேட்டிருப்பார். ஆனால் 
நேருக்கு நேர் ஏற்படுத்திய கசப்பான அனுபவத்திற்குப் பிறகும் விஜய் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். 
நட்புக்காக…கொடுத்திருக்கலாம் … அவர் சீனியர்… ஆனால் விஜயை விட ஜூனியரான 
சூர்யாவின் கையால் விஜய்க்கு அவார்ட்! விஜய் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம்… 
அவமானம் என்று விலகியிருக்கலாம்.. ஆனால் விஜய் அந்த அவார்டை ஏறுக் கொண்டார்..... நட்புக்காக…தனது விஜய் டிவி அவார்ட்ஸ் வருடா வருடம் நடக்கும் கோலிவுட் கொண்டாட்டம்… இதில்விஜய்க்கு “பாப்புலர் ஆக்டர்” என்ற அவார்ட் கொடுத்தார்கள்… ஆனால் அந்தஅவார்டை விஜய்க்கு தந்தது சூர்யா… இரண்டு பேரும் சம்கால நடிகர்கள்…இருவரில் சீனியர் விஜய்… விஜய்க்கு கமல் கையாலோ ரஜினி கையாலோ அவார்ட்கொடுத்தால் அது நியாயம்… ஏன் விகரம் கையால் கூட கொடுத்திருக்கலாம் … அவர்சீனியர்… ஆனால் விஜயை விட ஜூனியரான சூர்யாவின் கையால் விஜய்க்குஅவார்ட்! விஜய் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம்… அவமானம் என்றுவிலகியிருக்கலாம்.. ஆனால் விஜய் அந்த அவார்டை ஏறுக் கொண்டார்.....நட்புக்காக…தனது பெருந்தன்மைக்காக.....தற்போது அரசியல்காரணங்களுக்காக பல்வேறு போர்வையில் விஜயை த்ரீஇடியட்ஸ் படத்திலிருந்து நீக்குவதக்கு பிளான் போடுகிறார்கள் ….ஆம் விஜய்விலகியதாக வெளியான வதந்தியில் விஜய் தனது ஹேர் ஸ்டைலை மாற்றமறுத்ததாக கூறுவது பொய்யான தகவலாகும் அவர் 3 இடியட்ஸ் படத்தில் அமீரின்ஹேர் ஸ்டைல் போன்று ஓட்ட வெட்டியிருந்தார்.இவ்வாறு ஆவலுடன் காத்திருந்தவிஜயை நீக்க சதி நடப்பதே இப்போதைய செய்தி.அந்த படத்தில் விஜயின் ரோலைஏற்பதற்கு சூர்யா முண்டியடிக்கிறார்.… ஷங்கர் விஜய்க்கு நிகரான கதாநாயகன்கிடைக்கவில்லையெனில் நான் விலகுகிறேன் என்றார்…
இவ்வாறு விஜய் இல்லாவிட்டால் ஷங்கர் விலகுவதாக கூறியதால் தயாரிப்பு நிர்வாகம் அந்த அரசியல் கட்சியின் மிரட்டலை புறக்கணித்து விஜயை த்ரீ இடியட்ஸீல் நீக்க 
வேண்டாம் என இருந்த நிலையில் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க முண்டியடிப்பதன் மூலம் தயாரிப்பு நிர்வாகம் ஷங்கரை 
திருப்தி செய்யலாம் என இருக்கிறதாம்.இதனால் சூர்யா விஜய்க்கு எதிராக ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறார். 
சூர்யாவுக்கு என வாய்ப்புக்கள் இல்லையா ? கௌதம், முருகதாஸ் என்று பலர் சூர்யாவுக்காக காத்திருக்கிறார்கள். 
அவர் நினைத்திருந்தால் நண்பனுக்காக இந்த வாய்ப்பை நிராகரித்திருக்கலாம்.. ஆனால் சூர்யா அப்படி 
செய்யவில்லை….

சீமான் விடுதலியானர் அடுத்து என்ன ?

இலங்கை அரசை எதிர்த்து சீமான் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனு மீதான வழக்கு விசாரணையின்போது சட்டத்தினை ஒருவர் மீது பிரயோகிக்க மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என, சீமானின் வழக்கறிஞர் வாதிட்டார். சீமானுக்கு எதிராக கூடுதல் மாநகர ஆணையர் பிறபித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிப்பதற்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டினர். எனவே, சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் விடுதலை ஆனார் .

இதையடுத்து நடிகர் விஜய்யை வைத்து பகலவன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் , இதற்கான கதையை சீமான் சிறையிலேயே எழுதிவிட்டாராம் . இந்த படத்தின் மூலம் விஜய்க்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என படத்தின் வட்டாரங்கள் கூறுகின்றனர் .

விஜய்யின் காவலன் படத்தில் நடித்து முடித்து விட்டார் . இப்படம் பொங்கல் அன்று வெளிவர இருக்குறது . இதையடுத்து டைரக்டர் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் என்ற படத்தை இயக்கி வருகிறார் . இப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறது . இன்னும் த்ரி இடியட்ஸ் என்ற குழப்பும் உள்ளது .

பின்பு விஜய் வேலாயுதம் படத்தை முடித்த உடன் சீமான் இயக்கத்தில் பகலவன் என்ற படத்தை இயக்குவார் என தெரிகிறது . சீமான் இப்போது விஜய்க்காக பகலவன் படம் இயக்க காத்திருக்கிறார் ....
.

mardi 14 décembre 2010

வீட்டை விற்று விட்டார் விஜய்

சமீபத்தில் வெளியான விஜய் படங்கள் சரியாகப் போகாததால், அடுத்து ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய். மேலும் திரைத்துறையிலும் அவருக்கு திடீரென்று பிரச்சனைகள் முளைத்து வருகின்றன. இதனையடுத்து சாலிக்கிராமத்திலுள்ள தனது வீட்டை விஜய் விற்றதாக தெரிகிறது. சமீப காலமாக விஜய்யின் படங்கள் சரியாகப் போகாதது மற்றும் திரைத்துறையில் பிரச்சனை காரணமாக, விஜய் ஜோதிடரை அனுகியதாகவும், ஜோதிடர் அறிவுரை காரணமாகவே அவர் விற்றதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது நீலாங்கரையில் உள்ள பெரிய வீட்டில் வசித்து வருகிறார் விஜய்.


Kaavalan release in trouble

Kaavalan is a film which has Vijay and Asin in the lead roles. Siddique has directed this film. In the recent times Vijay has been facing lots of problems. Since his film Sura did not do well at the box office, the theatre owners are demanding compensation.
Moreover they are protesting that they will not release his films. Now Vijay is not able to get theatres for the release of his film Kaavalan. The film Kaavalan was to be released within few days. This film was supposed to be released during this month.
But since Kamal Haasan starrer Manmadhan Ambu is getting released on December 23rd, it was announced that Kaavalan will be released for Pongal. But now again another problem has risen for Kaavalan, because Kalaignar ‘s Ilaignyan , Karthi’s Siruthai and Dhanush’s Aadukalam is being released on Pongal day.
The theatres have already been booked for these films. Because of this Kaavalan is not getting theatres. Now a question has been released that when will Kaavalan will be released.


புலி எந்தப் பக்கம் பாயும்..?

திமுக, மதிமுக, என எந்தக்கட்சியில் இருந்தாலும் புலிகளின் ஆதரவாளராக இருப்பவர் கலைப்புலி தாணு. சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும்
பகலவன் படத்தை தயாரிக்க இருந்தார் தாணு. சிறையில் வாடிய சீமானை முதலில் சென்று சந்தித்த திரைப்பிரபலம் தாணு. தற்போது முழுமையாக சீமானுடன் செட்டில் ஆகிவிட்டார் தாணு. மதிமுகவிலிருந்து அவர் விலகியது கூட இந்த தைரியத்தில்தான் என்கிறார்கள்.
 ஆனால் இந்த விலகலை தொடர்ந்து பல கட்சிகளும் அவரை தங்கள் கட்சியில் இணைந்து கொள்ள அழைக்கின்றன.  என்ன முடிவெடுப்பது என்பதைதான் அவர் ஏற்கனவே தீர்மானித்துவிட்டாராம் தாணு. வைகோவுடன் தாணு இருந்த போது முக்கியமானவர்களுடன் கொண்ட நட்பை இப்போதும் தொடரும் அவர்,  அதை அப்படியே சீமானுக்கு மடை மாற்றிக் கொடுக்கக் இருக்கிறார் என்கிறார்கள் என்கிறார்கள் தாணுவின் உதவியாளர்கள்.
சிறந்த பொங்கல் பரிசாக நாம் தமிழர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறாராம். ஆனால் திமுகவுக்கு வந்தால் 50 கோடி வட்டியில்லாத கடன் தரத் தயார் என்று சொல்லியிருக்கிறார்களாம் திமுக வட்டாரத்தில். பார்க்கலாம் கலைபுலி எந்த பக்கம் பாயும் என்று.!

Kaavalan trailer in the US

Vijay will release the Kaavalan trailer in the US. His fans at the Bay Area are excited that their idol will be among them to release the trailer at the ‘Vijay Unplugged’, a musical nite to be held in his honor.
Vijay Unplugged has been scheduled to be held on December 16th 2010 which will be witnessed by his fans. Kaavalan is scheduled to be a Pongal release and his fans are already gearing up to make this release a grand affair.

ஜனவரி 17, விஜய் அரசியல் மாநாடு..

ஏறத்தாழ அதிகாரபூர்வமாகவே கசிந்துவிட்டது அந்த தகவல். த்ரி இடியட்ஸ் ரீமேக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் விஜய். ஷங்கரின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னால் என்ன நடந்ததோ, தனது மனக்குமுறல்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.விடம் கொட்டி தீர்த்தாராம் எஸ்.ஏ.சி.
போயஸ் கார்டனுக்கு அவர் போய் சேர்ந்த நேரம் யாருக்கு நல்ல நேரமோ, விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஏனென்றால் சொல்லி சொல்லி சிலாகிக்கும்படி அமைந்ததாம் வரவேற்பு. யாராக இருந்தாலும் போயஸ் கார்டனுக்கு வெளியில்தான் காரை விட வேண்டும். சிறிது நேர நடை பயிற்சிக்கு பின்தான் அம்மாவை தரிசிக்க முடியும். ஆனால் எஸ்.ஏ.சி யின் கார் போர்டிகோ வரை அனுமதிக்கப்பட்டதாம். கிட்டதட்ட முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்களாம் இருவரும்.
இந்த சந்திப்புக்குப் பின் ‘காவலன்’ பட வெளியீட்டை பொங்கல் வரை ஒத்தி வைத்திருக்கிறார்கள். ஜனவரி 17 ந் தேதி அநேகமாக திருச்சியில் தனது முதல் அரசியல் மாநாட்டை விஜய் கூட்டினாலும் ஆச்சர்யமில்லை என்கிறது அரசியல் வட்டாரம்.

lundi 13 décembre 2010

தித்திக்கும் காவலன் பொங்கல்!!!

காவலன் பாடல் வெளியிடப்பட்டு பட்டய கிளப்பிக்கொண்டு இருக்கிறது. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.ஆம் செல்போன் ரிங்க்டோனில் இருந்து FM ரேடியோகள் வரை எங்கும் காவலன் மயம் தான்.இன் நிலையில் இம்மாதம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட சித்திக் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த காவலன் திரைப்படம் வரும் பொங்கல் அன்று உலகம் முழுக்க 1000 திரைஅரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது

காவலன் படத்தில் விஜய் எதார்த்தமான ஹீரோ ஆக வருவாம்.அத்துடன் கடைசி கிளைமாக்ஸ் மனதை பறிக்கும் என விஜய் கூறியுள்ளார்.பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களின் ஆதரவுடன் காவலன் வெளிவர இருக்கிறது.

இந்த பொங்கல் நமக்கு சூப்பர் கலக்சன்மா !!

அதிமுக பிரச்சாரத்தில் அஜித், விஜய்??

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து விஜய்க்கு தொழில் ரீதியாக கொடுக்கப்பட்டு வரும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவருக்கு அனைத்து வழிகளிலும் உதவ தான் தயாராக இருப்பதாக அப்போது ஜெயலலிதா உறுதியளித்தார்.
மேலும், பொங்கலுக்குள் விஜய் புதுக் கட்சியைத் தொடங்கவிருப்பதாகவும் அவர் ஜெயலலிதாவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். புதிய கட்சி தொடங்கும்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என விஜய் ரசிகர் மன்றத்தினர் விஜய்யை வலியுறுத்தியுள்ளனர். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு விட்டார்.
இதையடுத்து அவர் ஜெயலலிதாவை சந்திக்கலாம் என்று இரண்டுமுறை எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் விஜய்யோ அல்லது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ வரவில்லை. இந்த நிலையில் விஜய்க்கு குறிப்பிட்ட தரப்பிலிருந்து நெருக்கடிகள் அதிகமாகியுள்ளன. ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட முக்கியப் புள்ளி கொடுத்த நெருக்கடியை ஏற்று விஜய்யை நீக்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படத்துக்காக இயக்குநர் ஷங்கர் கூறியபடி தலைமுடியை ஒட்ட வெட்டி படப்பிடிப்புக்காக ஆவலுடன் காத்திருந்த விஜய்க்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இது போதாதென்று அவரது எதிர் வரும் படங்களை பெருமளவில் சிக்கலுக்குள்ளாக்கும் வேலைகளும் நடந்து வருவதாகவும் விஜய்க்கு தகவல்கள் வந்து சேர்ந்தன. இதனால் அப்செட் ஆன அவர் தற்போது மனம் உடைந்து அமெரிக்காவுக்குப் போய் விட்டார். தனது காவலன் பட புரமோஷனுக்காகவே அவர் அமெரிக்கா போயுள்ளதாக கூறப்பட்டாலும் உண்மையான காரணம் இதுதானாம்.
இதனால் மிகவும் வேதனையில் ஆழ்ந்தார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அவருக்கு விஜய், அதிமுகவுடன் நெருங்குவதில் உடன்பாடு இல்லை. காரணம், முதல்வர் கருணாநிதி மீது தீவிர பாசம் வைத்திருப்பவர் சந்திரசேகர். இதன் காரணமாக முதல்வரையே நேரில் பார்த்து தனது மகனுக்கு ஏற்பட்டு வரும் சிக்கல்கள் குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளார். முதல்வர் தரப்பிலும் அதுகுறித்து உரிய முறையில் கவனிக்கப்படும் எனஉறுதியளிக்கப்பட்டதாம்.
இருந்தாலும் விஜய்க்கு எழுந்த சிக்கல்கள் குறைந்தது போலத் தெரியவில்லையாம். இதனால் மகனின் சந்தோஷம்தான் முக்கியம் என்பதை உணர்ந்த அவர் தற்போது விஜய் வழிக்கு வந்து விட்டார். தனது மகனின் நிலையை முழுமையாக ஆதரித்துள்ள சந்திரசேகர் நேற்று அதிரடியாக ஜெயலலிதாவை சந்தித்து மனம் விட்டுப் பேசினார். மகனுக்கு வந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளிலும் அதிமுக ஆதரவாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டாராம்.
சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஜெயலலிதா வீட்டுக்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் சென்றார். ஜெயலலிதாவுடனான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. விஜய்க்கு தொழில் ரீதியாக வரும் பிரச்சனை குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விவரமாக எடுத்துரைத்தார். எஸ்.ஏ.சந்திரசேகரின் புகார்களை பொறுமையுடன் கேட்டறிந்த ஜெயலலிதா அனைத்து வகையிலும் உதவியாக இருப்பதாக உறுதி அளித்தாராம்.
முன்னதாக சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியிருந்தார். சில நிமிடங்களே நீடித்த அந்தப் பேச்சுக்குப் பின்னர் மதுரையில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா. தமிழகத்தில் ஒரு முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. அவர் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னார். அதற்கே அந்த நடிகரின் 4, 5 படங்களை தோல்வி படங்களாக ஆக்கி விட்டனர். இதைப் பற்றி அந்த நடிகர் என்னிடம் முறையிட்டார் என்று கூறியிருந்தார். அது விஜய்தான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். அதேபோல அஜீத்துக்கும் பிரச்சினை வந்தபோது அவரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
அஜீத்தும் வருவாரா?
இதனால் விஜய்யைப் போலவே விரைவில் அஜீத்தும் கூட அதிமுக பக்கம் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி பெரும் சிக்கல்கள் புடை சூழ்ந்து வரும் நிலையில், வருகிற17ம் தேதி காவலன் படம் திரைக்கு வருகிறது. அப்படத்தை பிரமாண்ட வெற்றிப் படமாக்குமாறு தனது கட்சியினருக்கு ஜெயலலிதா உத்தரவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்குள் கட்சியைத் தொடங்கும் விஜய், தனது புதிய கட்சியை அதிமுக கூட்டணியில் இணைத்து அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக, சட்டசபைத் தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. விஜய்யை மையமாக வைத்து தமிழக அரசியலில் புதிய புயல் கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

3 இடியட்ஸ் குழப்பும் சூர்யா..

ஷங்கர் இயக்குவதாக கூறப்படும் 3 இடியட்ஸ் ரீமேக்கிலிருந்து விஜய் விலகிவிட்டார் அல்லவா… இப்போது அவருக்குப் பதில் இந்த பாத்திரத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படம் இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அமீர் கான் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது. படப்பிடிப்புக்குக் கிளம்பிய நிலையில், படத்தின் தனது வேடத்துக்காக நிறைய கெட்டப் மாற்ற வேண்டிய நிலை இருந்ததால், அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகின.
இதற்கு விளக்கமளித்த விஜய், இந்தப் படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதை படத்தின் தயாரிப்பாளர்தான் சொல்ல வேண்டும் என புரியாத அளவுக்குப் பேசி குழப்பினார்.
இந்த நிலையில், 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பார் என்றும், இதுகுறித்து அவரிடம் இயக்குநர் ஷங்கர் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பேசிய சூர்யா, “இந்தப் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது..” என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
அட, யார்தான் நடிக்கிறீங்கன்னு சொல்லித் தொலைங்கப்பா… பெரிய ராணுவம் ரகசியம் பாருங்க!

dimanche 12 décembre 2010

கேப்டனுக்கு கடுக்காய்! தளபதிக்கு கல்தா!


கேப்டன் விஜயகாந்த் நடித்து இயக்கி, டூயட் பாடியிருக்கும் விருதகிரி படம் இன்று ரிலீஸ். ஆனால் கேப்டனின் படத்துக்கு சிகப்புக் கம்பளம் விரிக்க விநியோகஸ்தர்களோ, தியேட்டர் உரிமையாளர்களோ  முன்வரவில்லையாம். ஆறுதலுக்கு சென்னையில் மட்டும் சில தியேட்டர்களில் விருதகிரியை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

விருதகிரி படத்தின் இசை வெளியீட்டை மாநாடுபோல நடத்தி அதில் பேசிய கேப்டன், ‘எனது படத்தை வெளியிடவிடாமால் ஆளுங்கட்சி சதி செய்கிறது’ என்றெல்லாம்  பேசினார். அவர் பேசியது உண்மைதானா என்று விநியோகஸ்தர்களைக் கேட்டால் கொதித்துப் போய் பதி சொல்கிறார்கள். “இதற்கு முன்பு கேப்டனின் படங்கள் கொடுத்த துக்கடா வசூல்தான் எங்களை யோசிக்க வைக்கிறது. மீண்டும் நாங்கள் விஷப்பரீட்சை செய்து பார்க்க முடியாது’’ என்கிறார்கள்.  இதையும் மீறி தனது கட்சிக்காரர்கள்  ‘பலருக்கு வச்சுக்குங்க…! அட வச்சுங்குங்கப்பா’ என்று  படத்தைக் கையில் திணித்து கிடைக்கிற தியேட்டரில் ரிலீஸ் செய்யயுங்கள் என்று உத்தரவு போட்டிருக்கிறாராம்.  இதைவிட பெரிய அதிரடி டிசம்பர் 17 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள விஜயின் காலவலன் படத்துக்கு சென்னைக்கு வெளியே நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். இதனால் காவலனை டிசம்பர் 26-க்கு தள்ளி வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம் சக்தி சிதம்பரம் தரப்பில். கேப்டனுக்கு கடுக்காயும், தளபதிக்கு கல்தாவும் கொடுக்கிறார்களே என்று கொதித்துக் கிடக்கிறார்களாம் இருதரப்பு ரசிகர்களும்.

Vijay to meet his fans in San Francisco!

On Thursday (Nov 9), IlayathalapathyVijay flew to USA, for work cum a brief holiday. He is in Bay Area in San Francisco, to "meet and greet" his fans. 

Sources close to Vijay confirmed: Vijay said: "Ilayathalapathy Vijay is in Bay Area as a part of his US tour to promoteKaavalan and will also be meeting his fans in a meet and greet."

Vijay is getting increasingly popular in US; across the border in Canada he has a huge fan base. 

Vijay will be singing for his fans in a 'Vijay Unplugged' show during his trip.

The actor will meet his fans at Indian Cultural Centre on December 16th where a huge contingent of Indian Diaspora is expected to meet their favourite star.

காந்தத்தில் செய்யப்பட்ட கோட்! வடிவேலுவும் இரும்பு லாரியும்..

காவலன் படத்தில் விஜய்யை விடவும் வடிவேலுவைதான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஏனென்றால் இதற்கு முன்பு பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவை வைத்துக் கொண்டு சித்திக் ஏற்படுத்திய சிரிப்போற்சவம், இன்னும் சின்னத்திரைகளில் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் காமெடி போர்ஷனை மட்டும் நல்ல ரேட்டுக்கு விலை பேசி வருகிறார்களாம் சேனல் காரர்கள்.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே புதுப்புது ஸ்டைலில் வரப் போகிறார் வடிவேலு. ஒரு காட்சியில் இவர் உடல் முழுக்க காந்தத்தால் ஆன கோட் அணிந்து கொண்டு வருவாராம். யேய்... எனக்கு எதிரி எவனாயிருந்தாலும் அவன் கையில் வச்சிருக்கிற ஆயுதம் என்னை தாக்குவதற்கு முன்னாடியே என் கோட்ல பறந்து வந்து ஒட்டிக்கும். எப்படி நம்ம ஐடியா? என்று மார்தட்டுவாராம் வடிவேலு. அந்த நேரம் பார்த்து ஒரு தண்ணி லாலி அந்த பக்கம் வர, லாரியின் பாடி இரும்பும், வடிவேலு பாடியின் காந்தமும் ஒட்டிக் கொள்ள, லாரியோடு லாரியாக பறப்பாராம் வடிவேலு. யோசிக்கும் போதே பொத்துக் கொள்கிறதா சிரிப்பு?
இவர் இப்படி என்றால், இதே மாதிரி ஸ்டைலில் ஒரு காட்சியை யோசித்து வைத்திருக்கிறார் விவேக். இது விஷால் நடிப்பில் பிரபுதேவா இயக்கப்போகும் பெயர் வைக்காத படத்திற்காக.
சிக்ஸ்பேக் வயிற்றை காட்டி ஃபிகர்களை மடக்க வேண்டும் என்று பிளான் போடும் விவேக்கின் வயிற்றில் கேஸ் பலு£னை கட்டி விட்டுவிடுவாராம் அவரது நண்பர் செல் முருகன். அப்புறம் என்ன? விவேக் அப்படியே அந்தரத்தில் பறக்க, மீண்டும் எப்படி தரையிறங்குகிறார் என்பது ஒரு காட்சி!
காப்பியா இருந்தாலும் கலகலப்புக்கு இருக்கிற ருசியே தனிதான்.

samedi 11 décembre 2010

காவலன் ரிலீஸ் எப்போது…

தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாக் காவலன் ரிலீஸ் தான்.  கலைஞர் குடும்பத்தை எதிர்த்து இந்த படத்தை ஜெயிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் தளபதி. இவரின் படத்தை தானாகவே ரிலீஸ் செய்வதால் இந்த படத்திற்கு எந்த தொலைக்காட்சியிலும் விளம்பரம் வரவும் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. அப்படியும் வந்தால் ராஜ் டீவியிலும், ஜெயா டிவியிலுமே வரவேண்டும். அது வந்தும் எந்த பயனும் இல்லை என்பது உலகறிந்த விசயம். இரண்டு நாட்களாக தினகரன் நாளிதழ்களில் கூட விளம்பரம் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் 24 ஆம் தேதி என்று ஷக்தி சிதம்பரம் வீர வசனம் பேசினாலும், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் நிச்சயமாக அறிவிக்கப்படவில்லை. 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மன்மதன் அம்புவும் 23 ஆம் தேதிக்கு தள்ளிப்போனதால், ஏற்கனவே தள்ளுமுள்ளுவில் இருக்கும் தியேட்டர் பிரச்சனை மேலும் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பேசாமல் பொங்கலுக்கு ரிலீஸ் செய்துவிடலாமா என்றும் ஒரு யோசனை இருப்பதாக தெரிகிறது.
காவலன் எப்போது? யாருக்குத்தெரியும்?
Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...